தமிழக அரசின் மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்
துறை அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார் அவர்கள், 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை, 2017 ஆம் ஆண்டு
மார்ச் திங்கள் 16 ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன் வைத்து
ஆற்றும் உரை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்
(குறள் 233)
ஒருவரின் உயர்வால் பெற்ற புகழ் மட்டுமே இவ்வுலகத்தில் என்றும்
மறையாமல் நிலைத்து நிற்கும் என்ற தெய்வப் புலவர் திருவள்ளுவரின்
இந்தப் பொய்யாமொழியை நமது போற்றுதலுக்குரிய மறைந்த
முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின்
வாழ்வு மெய்ப்பித்துள்ளது. தாம் பேரன்பு செலுத்திய மக்களின் வாழ்வு
வளம் பெறவும், தமிழ்நாட்டை நாட்டிலேயே மக்கள் நலம் பேணும் ஒரு
முன்மாதிரி மாநிலமாக உருவாக்கவும், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்
ஆற்றிய அரும்பணிகள் இன்று அவரின் புகழை உலகம் முழுவதும்
கொண்டு சென்றுள்ளன. தனித்துவம் மிக்கவராகவும், நம் நினைவில்
என்றும் நிலைத்து நிற்கும் மாமனிதராகவும் விளங்கி, பாசத்திற்கு
உறைவிடமாகத் திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த
காலத்தில் நாமும் வாழ்ந்து, அவரின் மதிநுட்பமிக்க தலைமையின் கீழ்
பணியாற்றி அவரின் பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்
பெரும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளதை எண்ணி, பெருமையும்
பெருமிதமும் கொள்கிறோம். இந்த மாமன்றத்தில் குன்றா விளக்காய்
ஒளிர்ந்த அம்மா அவர்களின் திருவுருவை நமது இதயத்தில் நிலைநிறுத்தி,
2
நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்
என்ற அவர்களின் கனவினை நனவாக்க நமது வாழ்வை மீண்டும்
அர்ப்பணித்துள்ளோம். நிலையான நல்லாட்சியை தொடர்ந்து நடத்த,
மறைந்த நமது தலைவி அம்மா அவர்களிடம் நம்பிக்கையோடு ஆட்சிப்
பொறுப்பை மீண்டும் அளித்த, தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை
தொடர்ந்து நிறைவேற்றிட, எதிர்வரும் தடைகள் அனைத்தையும்
தகர்த்தெறிந்து, இந்த அரசு உறுதியுடன் செயல்படும் எனக் கூறி, நமது
நேசத்திற்குரிய புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்,
2017-2018 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இந்தப்
பேரவையின் முன் சமர்ப்பிக்க விழைகிறேன்.
2. மக்களின் நலனை மேம்படுத்தவும், அவர்களுக்கு ஏற்படும்
இடர்பாடுகளைக் களைந்திடவும், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய
மக்களைப் பேணிப் பாதுகாக்கவும், தேவையான திட்டங்களை வகுத்துச்
செயல்படுத்துவதே ஒரு பொறுப்பான அரசின் கடமையாகும். அதே
வேளையில், அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய உயர் பொருளாதார
வளர்ச்சியை எட்டத் தேவையான சூழ்நிலையையும் அத்தகைய அரசின்
திட்டங்கள் உருவாக்கிட வேண்டும். இதன் அடிப்படையில் தான்,
இந்த அரசு, அமைதி, வளம், வளர்ச்சி என்ற குறிக்கோளை மாநிலத்தின்
முன்னேற்றத்திற்கான கொள்கை முழக்கமாக முன்னிறுத்தியுள்ளது.
இந்தக் கொள்கையைப் பின்பற்றியே, பல்வேறு சமூக, பொருளாதார
மேம்பாட்டுத் திட்டங்களையும், உட்கட்டமைப்புத் திட்டங்களையும் இந்த
அரசு பொறுப்பேற்ற நாள் முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த வளர்ச்சிப்
பாதையில் மாநிலத்தை தொடர்ந்து கொண்டு செல்ல, கடந்த நிதிநிலை
அறிக்கையில் நமது நேசத்திற்குரிய தலைவி அம்மா அவர்களின்
தலைமையில் இருந்த அரசால் அறிவிக்கப்பட்ட ஐந்து இயக்கங்களான,
நீர் ஆதார மேலாண்மை, வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கான வீட்டுவசதி,
3
திறன் மேம்பாடு, தூய்மைத் தமிழ்நாடு ஆகிய இயக்கங்களும்,
வளர்ச்சிக்கான பதினொன்று சிறப்பு நோக்கு பெருந்திட்டங்களும்,
இந்த அரசின் அடித்தள செயல்பாட்டு வழிமுறையாக தொடர்ந்து
அமையும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மாநிலத்தின்
ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் இந்த நிதிநிலை
அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
3. பாசத்திற்கு உறைவிடமாகத் திகழ்ந்த நமது மறைந்த
முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள்
ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளன்றே, தேர்தல் அறிக்கையில்
அளித்த வாக்குறுதிகளில் ஐந்து முக்கிய வாக்குறுதிகளை
நிறைவேற்றினார்கள். மொத்தத்தில், 164 தேர்தல் வாக்குறுதிகள்
ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தவிர, 55 வாக்குறுதிகளை
நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன்,
மேலும் ஐந்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி
அரசாணைகளை வெளியிட்டுள்ளார்கள்.
கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகப்பேறு
நிதியுதவியினை 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக
உயர்த்துதல்
கூடுதலாக 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுதல்
ஒரு இலட்சம் உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம்
வாங்குவதற்கு, வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது
அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை மானியம் வழங்குதல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும்
உதவித் தொகையை இரட்டிப்பாக்குதல்
மீனவர்களுக்கென 5,000 வீடுகளைக் கட்டுதல்
4
என ஐந்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தருணத்தில்,
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் இந்த அரசு நிறைவேற்றுவதில்
உறுதியுடன் உள்ளது என்பதையும் இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக்
கொள்கிறேன்.
4. 2016-2017 ஆம் ஆண்டிற்கான பொருளாதார
ஆய்வறிக்கையில், நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியின் வளர்ச்சி
விகிதம் 2016-2017 ஆம் ஆண்டில் 7.1 சதவீதமாக இருக்கும் என திருத்தி
கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2017-2018 ஆம் ஆண்டிற்கான
வளர்ச்சி விகிதம் 6.5 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் எனவும்
கணிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களைச்
செயல்படுத்தவும், இந்த அரசு எதிர்கொண்டுள்ள பிற பொறுப்புகளை
நிறைவு செய்வதற்கு தேவைப்படும் கூடுதல் நிதி ஆதாரங்களைத்
திரட்டுவதற்கும், மாநில பொருளாதாரத்தை முடுக்கிவிட்டு
உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டியது அவசியமாகிறது.
பொருளாதார நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு சீராக முன்னேறி வரும்
நிலையில் 2016-2017 ஆம் ஆண்டிற்கான மாநிலப் பொருளாதார வளர்ச்சி
விகிதமானது, நிலையான விலையில் 7.94 சதவீதமாக உயரும் என
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த அரசின் ஒருங்கிணைந்த
முயற்சிகளால், முக்கியமான துறைகளில் தனியார் மற்றும் பொதுத்துறை
முதலீடுகள் அதிகரிக்கக்கூடிய சாதகமான சூழ்நிலை உருவாகி,
2017-2018 ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக
உயரும் எனக் கருதுகிறேன்.
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி
5. பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி முறையின் கீழ்
பதிவு செய்வதற்கான தொடக்க அளவை (கூhசநளாடிடன) நிர்ணயித்தல்;
5
புதிய வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்தும்போது மாநிலங்களுக்கு
ஏற்படக்கூடிய வரி வருவாய் இழப்பினை ஐந்தாண்டுகளுக்கு
முழு அளவில் ஈடுசெய்தல்; அவ்வாறு ஈடுசெய்ய, மாநில வரி
வருவாயினைக் கணக்கிடுவதற்கான வளர்ச்சி விகிதத்தை
2015-2016 ஆம் நிதி ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, சராசரியாக
ஆண்டிற்கு 14 சதவீதமாக எடுத்துக் கொள்ளுதல்; மத்திய பொருட்கள்
மற்றும் சேவைகள் மீதான வரி விகிதங்கள் (ஊழுளுகூ), ஒருங்கிணைந்த
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி விகிதங்கள் (ஐழுளுகூ)
ஆகியவற்றுக்கான வரைவுச் சட்டங்கள் மற்றும் இழப்பீட்டிற்கான வரைவுச்
சட்டம் ஆகியவற்றை இறுதி செய்தல்; பொருட்கள் மற்றும் சேவைகள்
மீதான வரிகளுக்கான அனைத்து விதிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு,
மாநில, மத்திய அரசு அலுவலர்களுக்கு ஒருங்கியல் முறையில்
சம அதிகாரமளித்தல் (உடிnஉரசசநவே) ஆகிய பல முக்கிய இனங்களில்
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி மன்றம் ஒருமித்த கருத்தினை
எட்டியுள்ளது. மத்திய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிச்
சட்டத்தையும், ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான
வரிச் சட்டத்தையும் பாராளுமன்றம் நிறைவேற்றுவதைத் தொடர்ந்து,
மாநில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி (ளுழுளுகூ) சட்டத்தினை
மாநில அரசும் இயற்றும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திட்டம் மற்றும் வளர்ச்சி
6. மத்திய அரசு 2017-2018 ஆம் ஆண்டிலிருந்து,
வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும்போது திட்டம்
மற்றும் திட்டம் சாரா வகைபாடுகளைக் கைவிட்டுள்ளது. மறைந்த
முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களால் தொடர்ந்து
வலியுறுத்தப்பட்டு வந்த இந்த மாற்றம், அரசின் செயல்முறையின்
அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட செலவினங்கள் மீது அதிகக் கவனம்
6
செலுத்தவும், வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பதை எளிமைப்படுத்தவும்
உதவும் என்பதால், இந்த முடிவை அரசு வரவேற்கிறது. மத்திய அரசின்
இந்த அணுகுமுறைக்கு ஏற்ப, மாநில திட்டக் குழுவிற்குப் பதிலாக
அந்த அமைப்பை மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவாக (ளுவயவந
னுநஎநடடியீஅநவே ஞடிடiஉல ஊடிரnஉடை) மாற்றி, அரசின் கொள்கைகளுக்கான
கருத்துருவாக்கம் செய்து மாநில வளர்ச்சிக்கு உரிய திட்டங்களை
உருவாக்க அரசிற்கு வழிகாட்டும் அமைப்பாக இதை அரசு
திருத்தியமைக்கும்.
7. மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா
அவர்களால் தொலைநோக்குப் பார்வையுடன், அனைவருக்கும்
பயனளிக்கும் வகையிலும், நீடித்து நிலைக்கத்தக்க சமூகப் பொருளாதார
வளர்ச்சியினை ஏற்படுத்தும் வகையிலும், ‘தமிழ்நாடு தொலைநோக்குத்
திட்டம் 2023’ உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தத்
தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில், கூடுதல் நிதி திரட்ட
தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதியத்தை முதல் வகை மாற்று முதலீட்டு
நிதியமாக (ஹடவநசயேவiஎந ஐnஎநளவஅநவே குரனே – ஊயவநபடிசல ஐ), தமிழ்நாடு
உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகத்தின் மூலம் மாநில அரசு
நிறுவியுள்ளது. இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (ளுநுக்ஷஐ)
தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதியம் பதிவு செய்யப்பட்டு, திரட்டப்பட உள்ள
6,000 கோடி ரூபாய் மொத்த நிதியில், முதற்கட்டமாக 1,200 கோடி ரூபாய்
நிதியைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இவ்வாறு திரட்டப்படும் நிதி, தமிழ்நாட்டின் புதிய
உட்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். இந்த மொத்த
நிதியில், முதலில் ஈடுசெய்யப்படும் ஊக்க மூலதனமாக (குசைளவ டுடிளள
ஊயவயடலவiஉ ஊயயீவையட) மாநில அரசு வழங்க வேண்டிய ஐந்து சதவீதமான
300 கோடி ரூபாயில் ஒரு பகுதியை, அதாவது 30 கோடி ரூபாயை
7
மாநில அரசு ஏற்கெனவே விடுவித்துள்ளது. 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தமிழ்நாடு
உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு முதலில் ஈடுசெய்யப்படும்
ஊக்க மூலதனத்திற்காக மீதமுள்ள 270 கோடி ரூபாய் உட்பட
2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு
உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் திட்டத் தயாரிப்பு நிதிக்காக
200 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
8. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான ஏற்றத்
தாழ்வுகளை அகற்றி, சமச்சீரான சமூக, பொருளாதார மேம்பாட்டினை
மாநிலம் முழுமைக்கும் கொண்டு வருவதற்காக ‘மாநில சமச்சீர் வளர்ச்சி
நிதியம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதியத்திலிருந்து இதுவரை,
472 திட்டங்களை 282.22 கோடி ரூபாய் செலவில் ஊரகப் பகுதிகளில்
உள்ள 105 பின்தங்கிய வட்டாரங்களில் செயல்படுத்துவதற்கு ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மாநிலத்தின் மலைப்பகுதி
வளர்ச்சிக்காக சொந்த நிதி ஆதாரங்களின் மூலமாக ‘சிறப்புப் பகுதி
மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாநில
சமச்சீர் வளர்ச்சி நிதியத்திற்காக 100 கோடி ரூபாயும், சிறப்புப் பகுதி
மேம்பாட்டுத் திட்டத்திற்காக 75 கோடி ரூபாயும் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட
தமிழ்நாடு புதுமை முயற்சிகளின் (கூஹசூஐஐ) கீழ் அரசுத்
துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் புதுமையான நிர்வாக
முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. 2016-2017 ஆம் ஆண்டில்,
இத்திட்டத்தின் கீழ் 138.39 கோடி ரூபாய் செலவில் 70 புதுமைத்
திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2017-2018 ஆம் ஆண்டிற்கான
8
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்காக
150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் நிவாரணம்
9. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்
மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய ‘வர்தா’ புயலால் ஏற்பட்ட
பாதிப்புகளைச் சரி செய்வதற்காகவும், மறுசீரமைப்புப் பணிகளை
மேற்கொள்வதற்காகவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து
585 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ‘வர்தா’ புயலைத் தொடர்ந்து,
மாநிலம் முழுவதும் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால்
பரவலான பயிரிழப்பாலும், குடிநீர்ப் பற்றாக்குறையாலும் மக்கள் கடும்
இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். குடிநீர்ப் பற்றாக்குறையைச்
சமாளிப்பதற்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (ளுனுசுகு)
விடுவிக்கப்பட்ட 105 கோடி ரூபாய் உட்பட, 615 கோடி ரூபாய்
அளவிற்கான செலவினம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர,
கால்நடை தீவனப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக 6.91 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு மேற்கொண்ட விரிவான
கணக்கெடுப்பின் அடிப்படையில் 50.35 இலட்சம் ஏக்கர் பரப்பளவில்
பயிர் செய்த 32.30 இலட்சம் விவசாயிகள் பயிரிழப்பால்
பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டு, மொத்தமாக 2,247 கோடி ரூபாய்
உள்ளீட்டு மானியம் அனுமதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட விவசாயிகளின்
வங்கிக் கணக்குகளில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
‘வர்தா’ புயலுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புப்
பணிகளுக்காக 22,573 கோடி ரூபாயையும், வறட்சி நிவாரணப்
பணிகளுக்காக 39,565 கோடி ரூபாயையும் தேசியப் பேரிடர் நிவாரண
நிதியிலிருந்து மத்திய அரசு வழங்க வேண்டுமென மாநில அரசு
கோரியுள்ளது. சேத விவரங்களை மதிப்பீடு செய்வதற்காக மத்தியக்
9
குழுக்கள் தமிழகத்தில் ஆய்வு செய்துள்ளன. இதன் அடிப்படையில்,
மத்திய அரசு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விரைவில்
தேவையான நிதியுதவியை அளிக்கும் என இந்த அரசு நம்புகிறது.
வறுமை ஒழிப்பு
10. வறுமை ஒழிப்பு இயக்கத்தினை மாநிலம் முழுவதும்
செயல்படுத்த, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தை
மைய நிறுவனமாக செயல்பட அரசு அனுமதித்துள்ளது. ஊரக மற்றும்
நகர்ப்புரப் பகுதிகளில், வறுமையை அறவே அகற்றிட வேண்டும் என்ற
இந்த அரசின் இலக்கை அடைய, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரப்
பாதுகாப்பினை அளித்து, அதன் மூலம் ஏழை எளிய மக்களின் சமூகப்
பொருளாதார வளர்ச்சியினை உறுதிப்படுத்துவதே இந்த இயக்கத்தின்
குறிக்கோளாகும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு திறன் பயிற்சி,
கடனுதவி மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் குறுந்தொழில்
நிறுவனங்களை அமைத்து, அவை உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு
சந்தை தொடர்புகளை உருவாக்குவதை இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது.
இதனால், பெருமளவு உற்பத்தி செய்வதால் கிட்டும் பொருளாதாரப்
பயன்களை (நுஉடிnடிஅல டிக ளஉயடந) குறுந்தொழில் நிறுவனங்களும்
ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவதன் மூலம் பெற வாய்ப்பு ஏற்படும்.
11. இந்த அரசு ‘புதுவாழ்வு’ திட்டத்தினை 120 வட்டாரங்களில்
உள்ள 9.80 இலட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில்
4,174 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம்
2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது. இதைத்
தொடர்ந்து, அடுத்த கட்டமாக உலக வங்கி உதவியுடன், 2017-2018 ஆம்
ஆண்டில், கூடுதலாக 120 வட்டாரங்களில் 1,000 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கீட்டில் ‘தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டம்’ (கூயஅடை சூயனர
10
சுரசயட கூசயளேகடிசஅயவiடிn ஞசடிதநஉவ) செயல்படுத்தப்படும். தமிழ்நாடு மாநில
கிராமப்புற வாழ்வாதார இயக்கம், மீதமுள்ள 145 வட்டாரங்களிலும்
செயல்படுத்தப்படுவதன் மூலம், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து
385 வட்டாரங்களிலும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்த வழி
ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை ஏழ்மையில்லா மாநிலமாக மாற்றுவதற்கு,
பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்துக் குடும்பங்களையும்
வறுமையின் பிடியிலிருந்து மீட்க இந்த அரசு உறுதியாக உள்ளது.
2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில்,
ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக 469 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
12. ‘தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்கு’
மத்திய அரசிடமிருந்து பெறப்படும் நிதி ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது.
2016-2017 ஆம் ஆண்டில், இதுவரை, மத்திய அரசு 58.45 கோடி ரூபாயை
இத்திட்டத்தின் கீழ் நமது மாநிலத்திற்கு வழங்கியுள்ளது. நகர்ப்புர
வறுமையை முழுமையாகக் களைவதற்கு, ‘தேசிய நகர்ப்புர வாழ்வாதார
இயக்கத்துடன்’ ஒருங்கிணைத்து, மாநில அரசு தனது சொந்த
நிதியிலிருந்து ‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதாரத் திட்டத்தை’
செயல்படுத்தி வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத்
திட்ட மதிப்பீடுகளில், நகர்ப்புர வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக
272.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு
13. திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை ஒருங்கிணைத்துச்
செயல்படுத்த ‘தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தை’ ஒரு
ஒருங்கிணைப்பு முகமையாக இந்த அரசு அனுமதித்துள்ளது. கடந்த
ஆறு ஆண்டுகளில் 2.46 இலட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி
11
அளிக்கப்பட்டுள்ளதுடன், 73,558 இளைஞர்கள் வேலைவாய்ப்பையும்
பெற்றுள்ளனர். தகுந்த சான்றிதழ் ஏதுமில்லாத ஒரு இலட்சம் திறன் பெற்ற
தொழிலாளர்களை திறனாய்வு செய்து, திறன் சான்றிதழ் அளிக்கும்
திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு
பயிற்சியளிப்பதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு
150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர,
கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில்,
மத்திய அரசின் நிதியுதவியுடன் இந்தியப் பன்னாட்டு திறன்பயிற்சி
மையங்களை நிறுவிட இந்த அரசு முடிவு செய்துள்ளது. அயல் நாடுகளில்
வேலை வாய்ப்பைத் தேடுபவர்களுக்கு, மேம்பட்ட பயிற்சிகளையும்,
அயல்நாட்டு மொழிப் பயிற்சிகளையும் இம்மையங்கள் மூலமாக
வழங்கவும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் (டீஎநசளநயள
ஆயnயீடிறநச ஊடிசயீடிசயவiடிn) மூலமாக வேலைவாய்ப்பை உருவாக்கித்
தரவும் இத்திட்டம் உதவும்.
14. வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும்
மாதாந்திர உதவித்தொகையை இரட்டிப்பாக்கியதன் மூலம், மற்றுமொரு
தேர்தல் வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்படி,
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 100 ரூபாயிலிருந்து
200 ரூபாயாகவும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு
150 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்களுக்கு 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும், பட்டப்படிப்பு
மற்றும் பட்ட மேற்படிப்பு கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு
300 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும் மாதாந்திர உதவித்தொகை
உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு
12
சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களின் தகுதிக்கேற்ப திறன் பயிற்சி
வழங்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்கும்.
தமிழ்மொழி வளர்ச்சி
15. பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளுக்கு
உள்ள வசதிகளை 4.36 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் இந்த அரசு
மேம்படுத்தி உள்ளது. மேலும், மதுரையிலுள்ள, உலகத் தமிழ்ச் சங்கத்தில்
பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்காக 37 கோடி ரூபாய்
வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் உயரிய கலாச்சார பாரம்பரியத்தினை
பறைசாற்றும் விதமாக, இத்தமிழ்ச் சங்கத்தில் ‘தமிழர் கலாச்சார
பாரம்பரிய அருங்காட்சியகத்தை’ இந்த அரசு நிறுவும். 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தமிழ்ப்
பல்கலைக்கழகத்திற்காக 6 கோடி ரூபாய் உட்பட, தமிழ் வளர்ச்சித்
துறைக்காக 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு
16. பல்வேறு சவால்களுக்கிடையே மாநிலத்தில் பொது
அமைதியை இந்த அரசு தொடர்ந்து சிறப்பாகப் பராமரித்து வருகிறது.
அனைத்துக் காவல் நிலையங்களும் சொந்தக் கட்டடங்களில் இயங்க
வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. 2011 ஆம் ஆண்டு
முதல், 141 காவல் நிலையங்களுக்குக் கட்டடங்கள் கட்டித் தருவதற்கான
பணிகள் 77.42 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, 2017-2018 ஆம் ஆண்டில் 30 கோடி ரூபாய் செலவில்,
கூடுதலாக 49 காவல் நிலையங்களுக்கு கட்டடங்கள் கட்டித்
தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். காவல் துறையினரின்
வீட்டுவசதித் தேவையை நிறைவு செய்ய, கடந்த ஆறு ஆண்டுகளில்
13
பல்வேறு கட்டங்களாக வீட்டுவசதி வழங்கும் திட்டங்கள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2011 ஆம் ஆண்டிலிருந்து,
1,655 கோடி ரூபாய் செலவில் 14,172 வீடுகள் கட்டுவதற்காக ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில் 450 கோடி ரூபாய்
செலவில், கூடுதலாக 3,000 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள்
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
17. காவல் துறையினரை ஊக்குவிப்பதற்காக, கூடுதல்
பணியாளர்கள், வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்ந்து
வழங்கப்பட்டு வருகின்றன. காவலர்களுக்கு வழங்கப்படும்
உபகரண பராமரிப்புப் படி, மாதம் ஒன்றிற்கு 100 ரூபாய் கூடுதலாக
உயர்த்தி வழங்கப்பட்டதோடு, இடர் படியும், ஆபத்துகாலப் படியும்
உயர்த்தப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர்
தேர்வு வாரியத்தால் சிறப்புக் காவல் இளைஞர் படைக்குத்
தேர்வு செய்யப்பட்ட 10,099 நபர்களில், 8,500 நபர்கள் இரண்டாம்நிலைக்
காவலர்களாகத் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில்
சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சிறப்புக்
காவல் இளைஞர் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு, மேலும்
10,500 நபர்களை, 2017-2018 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சீருடைப்
பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு செய்யும்.
18. ‘குற்றங்களையும், குற்றவாளிகளையும் கண்காணிக்கும்
கணினி இணைப்புத் திட்டத்தின்’ கீழ் மாநிலம் முழுவதும் உள்ள
1,913 காவல் நிலையங்கள் / சிறப்புப் பிரிவுகள் மற்றும் 488 உயர்
அலுவலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை விரைவில்
அடையாளம் கண்டு, குற்ற வழக்கினை விரைவில் தீர்த்து வைப்பதில்
காவல் துறையினரின் செயல்திறனை இந்த முறை மேம்படுத்தியுள்ளது.
‘காவல் துறை நவீனமயமாக்கல்’ திட்டத்தின் கீழ் கூடுதல்
14
வாகனங்களையும், கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்கான நவீன
கருவிகளையும் 2016-2017 ஆம் ஆண்டில், 51.33 கோடி ரூபாய் செலவில்
அரசு வழங்கியுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத்
திட்ட மதிப்பீடுகளில், காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக
47.91 கோடி ரூபாய் உட்பட, காவல் துறைக்காக 6,483 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்
19. தொடர்ந்து நவீனக் கருவிகளை வழங்கி, தீயணைப்பு
மற்றும் மீட்புப் பணிகள் துறையை இந்த அரசு நவீனப்படுத்தி வருகிறது.
2016-2017 ஆம் ஆண்டில் 15 நீர்தாங்கி வண்டிகள் மற்றும் ஐந்து சிறிய
நுரைதகர்வு ஊர்திகள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தீயணைப்பு மற்றும்
மீட்புப் பணிகள் துறைக்கு 253 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள்
20. குற்றவாளிகளுக்கு திறன் பயிற்சிகளை அளித்து,
சிறைச்சாலை வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளில்
பணியமர்த்துவதன் மூலம், அவர்கள் விடுதலை பெற்ற பின்
சமுதாயத்துடன் எளிதில் ஒன்றிணைந்திட வழிவகுத்து, சிறைச்சாலைகள்
குற்றவாளிகளை சீர்திருத்தும் அமைப்புகளாகத் திகழ்கின்றன.

சிறைச்சாலைகள் துறைக்கு 282 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
15
நீதி நிர்வாகம்
21. நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த,
2011 ஆம் ஆண்டிலிருந்து 265 புதிய நீதிமன்றங்களை ஏற்படுத்த அரசு
ஆணையிட்டுள்ளது. மேலும், இதே காலகட்டத்தில், நீதிமன்றங்களின்
உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக, 928.22 கோடி ரூபாய்
செலவில் நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுவதற்கும், கூடுதல் பணியாளர்கள்
நியமனம் செய்வதற்கும் ஆணையிடப்பட்டுள்ளது. நீதிமன்ற
ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்டம் 37 கோடி ரூபாய்
செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால், வழக்கு
சம்பந்தப்பட்ட கோப்புகள் பராமரிக்கப்படும் மேலாண்மை முறை
மேம்படுவதுடன், நீதித் துறையின் செயல் திறனும் அதிகரிக்கும்.

நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கு 229 கோடி ரூபாயும்,
நீதி நிர்வாகத் துறைக்கு மொத்தமாக 984 கோடி ரூபாயும் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக ஆளுமை
22. பட்டா மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை அச்சிடுதல்,
ஓய்வூதியதாரர்களின் உயிர் நிலைச் சான்றிதழ் வழங்குதல், சமூகநலத்
திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்
கட்டணங்கள் செலுத்துவது உள்ளிட்ட 140 பொதுச் சேவைகள்,
இ-சேவை மையங்களின் மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
அரசின் சேவைகள் அனைத்தையும் வழங்கி, மக்களின்
பிரச்சினைகளுக்கு ஓரிடத் தீர்வு காணும் மையங்களாக (டிநே ளவடியீ
ளடிடரவiடிn உநவேசநள) இ-சேவை மையங்கள் உருப்பெற்று வருகின்றன
என்பது குறிப்பிடத்தக்கதாகும். மின்னணு சேவை விநியோக விதிகள்
16
அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், 500க்கும் மேற்பட்ட
அரசு சேவைகளை இணைய வழி வாயிலாகப் பெற வழிவகை ஏற்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களின் விபரங்களுடன்
ஒருங்கிணைக்கப்பட்ட தரவுதளமாக ‘மாநில குடியிருப்போர் தகவல்
தொகுப்பு மையம்’ செயல்படத் துவங்கியுள்ளதால், அரசின்
திட்டங்களுக்கான பயனாளிகளைத் துல்லியமாகக் கண்டறியவும்,
சிறப்பான முறையில் திட்டங்களைக் கண்காணிக்கவும் இத்தொகுப்பு
மையம் உதவும். மாநில அரசு தொடங்கிய ‘அம்மா திட்டத்தின்’ மூலம்
மாதந்தோறும் சராசரியாக 50,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு
வருகிறது. மேலும், 24 மணி நேரமும் இயங்கும் ‘அம்மா அழைப்பு மையம்’,
மக்களின் குறைகளுக்குத் தொடர்ந்து தீர்வுகண்டு வருகிறது.
வருவாய் நிர்வாகம்
23. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 65 புதிய
வட்டங்களும், ஒன்பது புதிய வருவாய்க் கோட்டங்களும்
உருவாக்கப்பட்டுள்ளன. 2016-2017 ஆம் ஆண்டில், மேலும் ஐந்து புதிய
வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், வருவாய்த் துறை
அலுவலகங்களைப் பொதுமக்கள் எளிதாக அணுகி பொதுச்
சேவைகளைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வட்டாட்சியர்
அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட
ஆட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டியதன் மூலம்,
வருவாய்த் துறையின் உட்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
2016-2017 ஆம் ஆண்டில் 31 வட்டாட்சியர் குடியிருப்புகளுடன்
அலுவலகங்கள் மற்றும் ஐந்து வருவாய்க் கோட்டாட்சியர்
அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள்
108.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2017-2018 ஆம் ஆண்டில் 42.16 கோடி ரூபாய் செலவில் மேலும் 10 புதிய
17
வட்டாட்சியர் அலுவலகங்கள் வட்டாட்சியர் குடியிருப்புகளுடனும்,
ஐந்து கோட்டாட்சியர் அலுவலகங்கள் கோட்டாட்சியர்
குடியிருப்புகளுடனும் கட்டப்படும்.
24. 2016-2017 ஆம் ஆண்டில், 2.72 இலட்சம் இலவச
வீட்டுமனைப் பட்டாக்களை இந்த அரசு இதுவரை வழங்கியுள்ளது.
2017-2018 ஆம் ஆண்டிலும், ஏழைக் குடும்பங்களுக்கு 3.50 இலட்சம்
வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க இந்த அரசு இலக்கு
நிர்ணயித்துள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில், ‘முதலமைச்சரின் உழவர்
பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் 3.03 இலட்சம் பயனாளிகளுக்கு
204.97 கோடி ரூபாய் அளவிற்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தற்போது கருஞ்சிவப்பு அட்டை (ஆயசடிடிn உடிடடிரச
உயசன) வைத்துள்ள உறுப்பினர் இயற்கை மரணம் அடைந்தால், அவரைச்
சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி
வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை நலிந்தோர் நிவாரணத்
திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பலன்களுக்கு இணையாக, 20,000 ரூபாய்
என உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, 2017-2018 ஆம்
ஆண்டில் 251 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்,
வருவாய்த் துறைக்காக 5,695 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை
25. விவசாயப் பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை
அதிகரிப்பதற்கும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும்
இந்த அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்து வருகிறது.
உணவுப் பாதுகாப்பினை எய்திட, நெல், சிறுதானியங்கள் மற்றும்
பயறு வகைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில், உணவு
18
தானிய உற்பத்தி இயக்கத்தினை 2012-2013 ஆம் ஆண்டில் மாநில அரசு
துவக்கியது. நீர்ப் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு,
திருந்திய நெல் சாகுபடி முறையை (ளுலளவநஅ டிக சுiஉந ஐவேநளேகைiஉயவiடிn)
பரவலாக்குவதுடன், நேரடி நெல் விதைப்பு முறையும் ஊக்குவிக்கப்பட்டு
வருகிறது. 2016-2017 ஆம் ஆண்டில், தொகுப்பு அணுகுமுறை (உடரளவநச
யயீயீசடியஉh) அடிப்படையிலான, பயறுவகை பயிர்களுக்கான சிறப்பு
தொகுப்புத் திட்டம் 50 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
2017-2018 ஆம் ஆண்டில் 100 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய
உற்பத்தி என்ற இலக்கை இந்த அரசு நிர்ணயித்துள்ளது.
26. கரும்பு அதிகளவில் நீர் பயன்படுத்தும் பயிர் என்பதாலும்,
அதன் சாகுபடிப் பரப்பு குறைந்து வருவதாலும், நீர் சேமிப்பை ஊக்குவித்து
அதன் உற்பத்தித் திறனை அதிகரித்து, சாகுபடிப் பரப்பு குறைவினால்
ஏற்படும் உற்பத்திக் குறைவினை ஈடுசெய்ய, நீடித்த நவீன கரும்பு சாகுபடி
முறையில் பயிரிடுவதையும், நுண்ணீர்ப் பாசனத்தை பயன்படுத்துவதையும்
ஊக்குவிக்க சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்
அடிப்படையில் கூடுதலாக 35,000 ஏக்கர் கரும்பு சாகுபடியை நுண்ணீர்ப்
பாசன முறையின் கீழ் கொண்டு வரவும், நீடித்த நவீன கரும்பு சாகுபடி
முறையை (ளுரளவயiயேடெந ளுரபயசஉயநே ஐnவையைவiஎந), மேலும் 40,000
ஏக்கரில் விரிவுபடுத்துவதற்கும் இந்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
27. மொத்த பயிர் சாகுபடிப் பரப்பில் 57 சதவீதம் மானாவாரிப்
பகுதியில் பயிரிடப்படுகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக,
இத்தகைய பகுதிகளில் பயிர் சாகுபடி உறுதியற்ற நிலையில் உள்ளதையும்,
அதனால் விவசாயிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதையும் கருத்தில்
கொண்டு, இப்பகுதிகளில் பயிரிடப்படும் சிறுதானியங்கள், பயறுவகைகள்,
எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்திப் பயிர்களின் உற்பத்தி மற்றும்
உற்பத்தித் திறனை அதிகரிக்க சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில்,
19
நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான ஒரு சிறப்புத் திட்டம்
(ஆளைளiடிn டிn ளுரளவயiயேடெந னுசல டயனே ஹபசiஉரடவரசந) 2016-2017 ஆம்
ஆண்டில் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில்
802.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொகுப்பு அணுகுமுறையைப் பின்பற்றி
(உடரளவநச யௌநன யயீயீசடியஉh), தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன்
சங்கங்களை மையமாகக் கொண்டு ஒவ்வொரு தொகுப்பும்
2,500 ஏக்கருக்குக் குறையாத பரப்பளவு கொண்ட 1,000 மானாவாரித்
தொகுப்புகளை உருவாக்கி இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
2016-2017 ஆம் ஆண்டில், 5 இலட்சம் ஏக்கர் பரப்பளவில்
200 மானாவாரித் தொகுப்புகளில் இத்திட்டப் பணிகள்
தொடங்கப்பட்டுள்ளன. 2017-2018 ஆம் ஆண்டில், மேலும் 10 இலட்சம்
ஏக்கர் பரப்பளவில் 400 மானாவாரித் தொகுப்புகளில் இத்திட்டம்
செயல்படுத்தப்படும்.
28. பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம்,
2016 ஆம் ஆண்டு காரீப் பருவம் முதல், நமது மாநிலத்தில்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2016-2017 ஆம் ஆண்டில்,
இத்திட்டத்தின் கீழ் 15.20 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு,
30.33 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் காப்பீடு
செய்யப்பட்டுள்ளன. 2016-2017 ஆம் ஆண்டில், இத்திட்டத்தில் பயிர்க்
காப்பீட்டுக் கட்டண மானியமாக 487.37 கோடி ரூபாயை இந்த அரசு
அனுமதித்துள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில், மேலும் அதிக அளவிலான
சாகுபடிப் பரப்பினை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு
வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் கீழ்
பயிர்க் காப்பீட்டுக் கட்டண மானியத்திற்காக, 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 522.70 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
20
29. அதிக அளவில் வருவாய் தரக்கூடிய தோட்டக்கலைப்
பயிர்களின் பரப்பளவை அதிகரிப்பது மற்றும் பயிர் பலவகையாக்கலை
விரிவுபடுத்துவது போன்றவற்றில் இந்த அரசு சிறப்புக் கவனம் செலுத்தி
வருகிறது. எனவே, தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவை
தற்போதுள்ள 34 இலட்சம் ஏக்கர் என்ற அளவிலிருந்து 2017-2018 ஆம்
ஆண்டில் 39 இலட்சம் ஏக்கராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அறுவடைக்குப் பின்பு ஏற்படும் இழப்பினைக் குறைத்திடும் வகையிலும்,
பண்ணையளவில் மதிப்புக் கூட்டும் நோக்கத்திலும், சிறப்புத் திட்டமாக,
காய்கறி மற்றும் பழங்களுக்கான விநியோகத் தொடரமைப்பு
மேலாண்மைத் திட்டம் (ளுரயீயீடல ஊhயin ஆயயேபநஅநவே), 398 கோடி ரூபாய்
மதிப்பீட்டில், 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், உயர் தொழில்நுட்பங்களைப்
பரவலாக்குவதற்கும், அறுவடைக்குப் பிந்தைய உட்கட்டமைப்பு
வசதிகளை வலுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.
30. விவசாயப் பொருட்களுக்கான விலையில் ஏற்படும்
ஏற்றத்தாழ்வுகளின் பாதிப்பிலிருந்து விவசாயிகளை இந்த அரசு
தொடர்ந்து பாதுகாக்கும் முயற்சியாக, நெல் கொள்முதலுக்கு
மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக்
கூடுதலான தொகையை உற்பத்திக்கான ஊக்கத் தொகையாக வழங்க
2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்
200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று,
விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலையின்படி,
கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்குவதற்காக இந்த ஆண்டு
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகை முன்பணமாக
137.26 கோடி ரூபாயை இந்த அரசு இந்த ஆண்டில் வழங்கியுள்ளது.
21
31. விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, முக்கியமான ஒழுங்குமுறை
விற்பனைக் கூடங்களையும், கூட்டுறவு விற்பனைச் சங்கங்களையும்
ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசிய வேளாண் மின்சந்தை திட்டத்தில் (ந-சூஹஆ) உள்ளூர் சந்தைகளை
இணைப்பதற்கு ஏதுவாக, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்,
1987 ஆம் ஆண்டைய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை
(முறைப்படுத்துதல்) சட்டத்திற்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சந்தைகள்
திறம்பட செயல்படுவதற்கும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கான
நியாயமான ஆதாய விலையைப் பெறுவதற்கும் வழிவகுக்கும் இத்தகைய
முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
32. விவசாயிகளுக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்
கடன் சங்கங்களுக்கும், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள்
வழங்கப்பட்டு வருவதுடன், வேளாண் தொழிலாளர் பற்றாக்குறையை
எதிர்கொள்வதற்கு, வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும்
மையங்களை இளைஞர்கள் தொடங்குவதற்கும் நிதியுதவி அளிக்கப்பட்டு
வருகிறது. பண்ணை இயந்திரமயமாக்கலுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில்,
299.83 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 2017-2018 ஆம்
ஆண்டில், இதற்காக 100 கோடி ரூபாய் செலவிடப்படும். அதில்
30 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும்
கருவிகளை வாங்குவதற்கான மானியமாக வழங்கப்படும். ஏற்கெனவே,
49.59 கோடி ரூபாய் மானியத்தில் 513 வேளாண் இயந்திரங்கள்
வாடகைக்கு வழங்கும் மையங்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களால்
அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு
வழங்குவதற்காக 590 கூடுதல் மையங்களை 2017-2018 ஆம் ஆண்டில்
அமைக்க அரசு உதவும்.
22
33. நெல், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள்,
பருத்தி போன்ற முக்கியமான பயிர்கள் மற்றும் காய்கறிகளுக்கான,
இனப்பெருக்க மூல விதைகள் (க்ஷசநநனநச ளுநநனள) முதல்
சான்றளிக்கப்பட்ட விதைகள் (ஊநசவகைநைன ளுநநனள) வரை உள்ள அனைத்து
நிலைகளிலும் விதைகள் உற்பத்தியை வலுப்படுத்தும் வகையில்,
விதை உற்பத்திக்கான உட்கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கான
புதிய திட்டத்தை, 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2017-2018 ஆம் ஆண்டில்
இந்த அரசு செயல்படுத்தும்.
34. கடந்த ஆறு ஆண்டுகளில், 1,002 கோடி ரூபாய்
செலவில், 4.84 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசனம்
விரிவுபடுத்தப்பட்டதன் மூலம், 1.50 இலட்சம் விவசாயிகள்
பயனடைந்துள்ளனர். 2017-2018 ஆம் ஆண்டில், 369 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கீட்டில், கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு
சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில், நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ்
ஒரு இலட்சம் ஏக்கர் கூடுதலாக கொண்டுவரப்படும்.
35. பயிர் சாகுபடியில் உள்ள 81.18 இலட்சம் நில உடமைகளில்
சிறு, குறு விவசாயிகள் வசம் உள்ள 74.47 இலட்சம் நில உடமைகள் சிறிய
நில உடமைகளாக இருப்பதால், இச்சிறு நில உடமைகளில், வேளாண்மை
மேம்பாடு பெரும் சவாலாக உள்ளது. அத்தகைய சிறு, குறு
விவசாயிகளால், தேவைப்படும் கடன் வசதியைப் பெறுவதற்கோ, புதிய
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவோ, உற்பத்திப் பொருட்களின்
மதிப்பைக் கூட்டி அதிக இலாபம் ஈட்டவோ இயலுவதில்லை. எனவே,
ஒருங்கிணைந்து கடன் வசதி பெறுதல், சிறந்த தொழில்நுட்ப முறைகளைப்
பின்பற்றுதல், முன் மற்றும் பின் சந்தை இணைப்பு தொடர்புகளை
ஏற்படுத்துதல் போன்றவற்றை சிறப்பான முறையில் மேற்கொள்ள கூட்டுப்
பண்ணைய முறையை ஊக்குவிக்கும் வகையில், சிறு, குறு
23
விவசாயிகளை ஒன்றிணைத்து, “உழவர் உற்பத்தியாளர் குழுக்களாகவும்
(குயசஅநச ஞசடினரஉநச ழுசடிரயீள)”, இக்குழுக்களை ஒருங்கிணைத்து
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாகவும் (குயசஅநச ஞசடினரஉநச
டிசபயnணையவiடிn) உருவாக்குவதற்கு, புதுமையான ஒரு திட்டத்தினை
தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில்,
இரண்டு இலட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில்,
முன்னோடித் திட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு
குழுவிலும் குறைந்தபட்சம் 100 விவசாயிகள் கொண்ட, 2,000 உழவர்
உற்பத்தியாளர் குழுக்களைத் தொடங்க ஊக்குவிக்கப்படும். தேசிய
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (சூஹக்ஷஹசுனு) மற்றும் சிறு
விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பு (ளுஅயடட குயசஅநச ஹபசi
க்ஷரளiநேளள ஊடிளேடிசவரைஅ) மூலம் வழங்கப்படும் நிதியுதவி மற்றும் கடன்
வசதிகளைப் பெற உதவி செய்வதுடன், ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர்
குழுவிற்கும் மூலதன நிதியாக 5 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.
2017-2018 ஆம் ஆண்டில், இத்திட்டத்திற்காக மொத்தம்
100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,
வரும் ஐந்து ஆண்டுகளில் 40 இலட்சம் விவசாயிகள்
ஒருங்கிணைக்கப்படுவர். அதற்கேற்ப, இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு
படிப்படியாக அதிகரிக்கப்படும்.
கால்நடை பராமரிப்பு
36. விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள்
அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் முன்னோடித் திட்ட முயற்சிகளைத்
தொடர்ந்திடும் வகையில், 2017-2018 ஆம் ஆண்டில் ஏழைப்
பெண்களுக்கு 12,000 கறவைப் பசுக்களும், 1.50 இலட்சம் ஏழைக்
குடும்பங்களுக்கு ஆறு இலட்சம் வெள்ளாடுகள் அல்லது செம்மறி
24
ஆடுகளும் வழங்கப்படும். 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டங்களுக்காக 182 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில் கோழிப் பண்ணை
வளர்ச்சித் திட்டத்தையும், தீவன உற்பத்தித் திட்டத்தையும், தலா
25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.
தமிழகத்தில் உள்ள நாட்டு மரபின மாடுகளைப் பாதுகாக்கும்
நோக்கத்தில், காங்கேயம், பர்கூர் மற்றும் உம்பளாச்சேரி ஆகிய
இன மாடுகளுக்கான இனப் பாதுகாப்புத் திட்டத்தைச்
செயல்படுத்துவதற்காக இந்த அரசு கூடுதலாக நிதி உதவி
வழங்குவதுடன், புலிகுளம் மற்றும் ஆலம்பாடி போன்ற இதர உள்ளூர்
இனங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
37. கால்நடை பராமரிப்புத் துறையின் கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்துவதற்காக, 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை, 910 கால்நடை
கிளை மையங்களை கால்நடை மருந்தகங்களாகத் தரம் உயர்த்தியும்,
20 கால்நடை மருந்தகங்களையும், 200 கால்நடை கிளை மையங்களையும்
புதிதாக அமைத்தும் மாநில அரசு கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது.
இத்தகைய கால்நடை மருத்துவ சேவைகளும் கட்டமைப்பு வசதிகளும்
மேலும் வலுப்படுத்தப்படும். 2017-2018 ஆம் ஆண்டில், 25 கால்நடை
கிளை மையங்களை கால்நடை மருந்தகங்களாவும், வட்டத்
தலைமையகங்களில் உள்ள ஐந்து கால்நடை மருந்தகங்களை கால்நடை
மருத்துவமனைகளாகவும் தரம் உயர்த்துவதுடன், 25 புதிய கால்நடை
கிளை மையங்களையும் அரசு அமைக்கும்.
38. பால் பதப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பினை
வலுப்படுத்துவதற்காக, ஆவின் நிறுவனத்திற்கு இந்த அரசு தொடர்ந்து
நிதியுதவி அளித்து வருகிறது. இதன் பலனாக, 2011 ஆம் ஆண்டில்
நாளொன்றுக்கு 30.72 இலட்சம் லிட்டர் என்றிருந்த ஆவின் நிறுவனத்தின்
25
சராசரி பால் பதப்படுத்தும் திறன், 2016 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு
40.22 இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. பால் உற்பத்தியாளர்கள்
அதிக விலை பெறும் வகையில், பல வகையான பால் பொருட்களை
உற்பத்தி செய்து அதன் மதிப்பைக் கூட்ட ஆவின் நிறுவனம்
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மதுரையில் நாளொன்றுக்கு
25,000 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட, பல்வேறு வகையான
நறுமணப் பால் தயாரிக்க, புதிய உயர் வெப்பநிலையில் பதப்படுத்தும்
(ருழகூ) ஆலை 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். ஆவின்
பொருட்களை மக்களிடையே பிரபலப்படுத்த, கல்லூரிகள் மற்றும்
பல்கலைக் கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள் நிறுவப்படும்.

1,161 கோடி ரூபாயும், 130 கோடி ரூபாயும், முறையே கால்நடை பராமரிப்பு
மற்றும் பால்வளத் துறைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மீனளம்
39. மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்
விதமாக, 2017-2018 ஆம் ஆண்டில் 85 கோடி ரூபாய் செலவில்
மீனவர்களுக்கென 5,000 வீடுகளைக் கட்டுவதற்கு இந்த அரசு
உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி தடைக் காலத்திலும், மீன்பிடி குறைவாக
உள்ள காலத்திலும் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும்,
குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாய் நிவாரண உதவி தொடர்ந்து
வழங்கப்படும். தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம்,
தமிழ்நாடு மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம்
ஆகிய திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை
2,700 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக,
இத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாநில அரசின் பங்கு தேவையான
அளவிற்கு உயர்த்தப்படும். 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத்
26
திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டங்களுக்கென 357 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
40. மீனவ சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று, விற்பனை
வரியிலிருந்து விலக்களித்து, இயந்திர மீன்பிடிப் படகு ஒன்றிற்கு
வழங்கப்படும் டீசலின் அளவை, ஆண்டு ஒன்றிற்கு 15,000 லிட்டரிலிருந்து
18,000 லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு ஒன்றிற்கு
வழங்கப்படும் டீசலின் அளவை, ஆண்டு ஒன்றிற்கு 3,600 லிட்டரிலிருந்து
4,000 லிட்டராகவும் இந்த அரசு உயர்த்தி வழங்கும். மேலும், இயந்திரம்
பொருத்தப்பட்ட நாட்டுப் படகு ஒன்றிற்கு லிட்டருக்கு 25 ரூபாய் என்ற
மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவையும்,
ஆண்டு ஒன்றிற்கு 3,000 லிட்டரிலிருந்து 3,400 லிட்டராக இந்த அரசு
உயர்த்தி வழங்கும். இதனால், அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு
28 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இலங்கை அரசால்
கைப்பற்றப்பட்ட 18 படகுகள் சீர்செய்து பயன்படுத்த இயலாத அளவிற்கு
பாதிப்பிற்குள்ளானதைக் கருத்தில் கொண்டு, இதனால் பாதிக்கப்பட்ட
18 மீனவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் 90 இலட்சம் ரூபாயை,
ஒரு சிறப்பு உதவியாக இந்த அரசு வழங்க ஆணையிட்டுள்ளது என்பதை
தெரிவித்துக் கொள்கிறேன்.
41. மாநிலத்தில் உள்ள மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்துவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. 2011-2012 ஆம்
ஆண்டு முதல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மற்றும்
தேங்காய்ப்பட்டிணத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள
பூம்புகாரிலும் மூன்று புதிய மீன்பிடி துறைமுகங்களைக்
கட்டுவதற்காகவும், காசிமேடு, கடலூர், நாகப்பட்டினம், பழையாறு,
தூத்துக்குடி, மல்லிப்பட்டினம் மற்றும் சின்னமுட்டம் ஆகிய
ஏழு இடங்களில் உள்ள துறைமுகங்களை விரிவுபடுத்தி,
27
நவீனப்படுத்துவதற்காகவும் 1,105 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்புதல்
வழங்கியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 35 மீன் இறங்கு தளங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூரில்
113.90 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பது
உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள்
171.12 கோடி ரூபாய் செலவில் 2017-2018 ஆம் ஆண்டில்
மேற்கொள்ளப்படும்.
42. கடல் அரிப்பினால், கடலோர கிராமங்கள் வெகுவாக
பாதிக்கப்படுகின்றன. கடலோரப் பாதுகாப்பிற்காக, மணல் நிரப்பப்பட்ட
புவிசார் செயற்கை குழாய்களால் தயாரிக்கப்பட்ட நீரடி நீர்க்கால்களை,
சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்
கீழ் செயல்படும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப மையம்
வடிவமைத்துள்ளது. இத்தொழில்நுட்பத்தை, காஞ்சிபுரம் மாவட்டத்தில்
உள்ள கடலூர் - பெரியகுப்பம் கிராமத்தில், முன்னோடித் திட்டமாகச்
செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்தொழில்நுட்பம், கடல் அலைகளிலிருந்து கடலோரப் பகுதியைப்
பாதுகாப்பதுடன், மீன்வளத்தையும் அதிகரிக்கிறது. எனவே, நபார்டு
வங்கி கடனுதவியுடன், அதிக கடல் அரிப்பு ஆபத்துள்ள பகுதிகளில்
இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 2017-2018 ஆம் ஆண்டில்
20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்பைத் தடுக்கும் திட்டம்
செயல்படுத்தப்படும். 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில் மீன்வளத் துறைக்கு, மொத்தமாக 768 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
28
கூட்டுறவு
43. கருணையுள்ளம் கொண்ட மறைந்த முன்னாள்
முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், சிறு, குறு விவசாயிகள்
கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய குறுகியகாலப்
பயிர்க் கடன்களையும், நடுத்தரகால மற்றும் நீண்டகால விவசாயக்
கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளார். இதன்படி, 31.03.2016 அன்று
வரை செலுத்தப்படவேண்டிய 4,893.48 கோடி ரூபாய் மூலக் கடனும்,
386.77 கோடி ரூபாய் வட்டித் தொகையுமாக, மொத்தம்
5,280.25 கோடி ரூபாய் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது.
இத்தொகையை ஐந்து கட்டங்களாக திரும்பச் செலுத்துவதால் ஏற்படும்
கூடுதல் வட்டித்தொகை 760.49 கோடி ரூபாயையும் சேர்த்து, மொத்தம்
6,040.74 கோடி ரூபாய் நிதிச்சுமையை அரசு ஏற்றுள்ளது. இதனால்,
12.02 இலட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
இத்தொகையில், 1,794.66 கோடி ரூபாய் 2016-2017 ஆம் ஆண்டில்
கூட்டுறவு வங்கிகளுக்கு திரும்பச் செலுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக
1,830.50 கோடி ரூபாய் 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,
2017-2018 ஆம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 7,000 கோடி ரூபாய்
அளவிற்கு புதிய பயிர்க் கடன்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது விநியோகத் திட்டம்
44. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013, தமிழகத்தில்
01.11.2016 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அனைத்து
மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு என்ற தமிழ்நாடு பொது விநியோகத்
திட்டத்தின் முக்கிய கொள்கையில் எந்தத் தளர்வும் செய்யாமல்
இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்
29
கொள்கிறேன். சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு /
மசூர் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் மானிய விலையில் தொடர்ந்து
வழங்கப்படும். 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில், உணவு மானியத்திற்காக 5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
45. சந்தை அளவில் அத்தியாவசியப் பொருட்களின்
விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து
மேற்கொள்வதற்காக விலைக் கட்டுப்பாட்டு நிதியம் 100 கோடி ரூபாய்
அளவில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. பண்ணைப் பசுமை
நுகர்வோர் மையங்கள், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் மற்றும்
அம்மா உப்பு போன்ற பல்வேறு புதுமை முயற்சிகள் தொடர்ந்து
நடைமுறைப்படுத்தப்படும்.
சுற்றுச்சூழல் மற்றும் வனம்
46. ‘வர்தா’ புயலுக்குப் பின்னர், சென்னை, திருவள்ளூர்
மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பசுமைப் பரப்பை
மீள ஏற்படுத்துவதற்காக, மறைந்த முன்னாள் முதலமைச்சர்
ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான 24.02.2017 அன்று
‘சென்னையில் வர்தா புயலுக்குப் பிந்தைய கால பசுமையாக்கும் திட்டம்’
எனும் சிறப்புத் திட்டத்தை 13 கோடி ரூபாய் செலவில் அரசு
தொடங்கியுள்ளது. தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சாலை
ஓரங்கள், பொது இடங்களில் நாட்டு மரங்களை நடுவதும், தனியார்
நிலங்களிலும், வீட்டுப் பகுதிகளிலும் மரம் நடுவதை ஊக்கப்படுத்துவதும்
இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
47. வன பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் வனங்களின் அருகில்
வசிக்கும் பழங்குடியின மக்களின் சமூக மற்றும் பொருளாதார
30
மேம்பாட்டிற்காக, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் (துஐஊஹ)
உதவியுடன் செயல்படுத்தப்படும் ‘தமிழ்நாடு பல்லுயிரினப் பாதுகாப்பு
மற்றும் பசுமைத் திட்டத்தின்’ கீழ், 686 கோடி ரூபாய்
செலவில் பல்லுயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து
வருகிறது. இத்திட்டத்திற்காக, இதுவரை 398 கோடி ரூபாய்
செலவிடப்பட்டுள்ளதுடன், 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில் 88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
48. மத்திய அரசின் தேசிய பருவநிலை மாற்றத் தழுவல்
நிதி (சூஹகுஊஊ) மற்றும் பசுமை பருவநிலை நிதியின் கீழ் (ழுஊகு) மாநில அரசு
பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் தொடக்கமாக, மன்னார் வளைகுடாவில் உள்ள கடல் வாழிடங்கள்
மற்றும் உயிர்ப்பல்வகைமையின் மேலாண்மைக்காக, மத்திய அரசு
24.74 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. மன்னார் வளைகுடாப் பகுதியில்
உள்ள, அப்பா தீவு மற்றும் கோசவரி தீவின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புப்
பணிகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்ற சதுப்பு நிலங்களின்
புனரமைப்புப் பணிகள், கடல் அரிப்பு தடுப்புப் பணிகள் ஆகிய பணிகளை
பசுமை பருவநிலை நிதியின் கீழ் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது.
49. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைக்காக 567 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்வள ஆதாரங்கள் மற்றும் பாசனம்
50. நீர் ஆதாரங்களை சிறப்பாக மேலாண்மை
செய்வதற்காகவும், முழுமையான அளவில் அவற்றைப்
பயன்படுத்துவதற்காகவும், ஒருங்கிணைந்த முயற்சிகளை இந்த அரசு
31
எடுத்து வருகிறது. நீர் நிலைகளை சீரமைக்கும் முயற்சியாக, பொது
மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் குடிமராமத்து முறைக்கு
புத்துயிரூட்ட, 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ‘நீர் ஆதார மேலாண்மை
இயக்கம்’ ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில்
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 300 கோடி ரூபாயாக உயர்த்தி,
குடிமராமத்து முறையை அரசு வலுப்படுத்தும். இத்திட்டத்தின் கீழ்,
நீர்நிலைகளில் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் புதர்க் காடுகளை
அகற்றுதல், அணைகளைப் பராமரித்தல், மதகுகள், ஏரிகள் மற்றும்
கால்வாய்களில் உள்ள இதர கட்டமைப்புகளை சீரமைத்தல் போன்ற
செயல்பாடுகள் சமுதாயப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்.
51. காவேரி வடிநிலப் பகுதியின் வெண்ணாறு உப வடிநிலப்
பகுதியில், ‘பருவநிலை மாற்றத் தழுவல் திட்டத்தின்’ முதற்கட்டப்
பணிகளை, 960.66 கோடி ரூபாய் செலவில், 2015-2016 ஆம் ஆண்டு
முதல் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் அரசு செயல்படுத்தி வருகிறது.
அரிச்சந்திரா நதி, அடப்பாறு, பாண்டவையாறு, வெள்ளையாறு, வளவனாறு
மற்றும் உப்பனாறு ஆகிய நதிகளில், பல்வேறு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, 2016-2017 ஆம் ஆண்டில்
71 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 400 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
52. வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட ‘நீர்வள நிலவளத்
திட்டத்தை’ (ஐசசபையவநன ஹபசiஉரடவரசந ஆடினநசnளையவiடிn யனே றுயவநச-க்ஷடினநைள
சுநளவடிசயவiடிn யனே ஆயயேபநஅநவே ஞசடிதநஉவ) தொடர்ந்து, அதன் இரண்டாம்
கட்ட திட்டத்தை, உலக வங்கி கடனுதவியுடன் 3,042 கோடி ரூபாய்
மதிப்பீட்டில், 2017-2018 ஆம் ஆண்டில் செயல்படுத்த இந்த அரசு
வழிவகுத்துள்ளது. இந்த இரண்டாம் கட்ட திட்டப் பணிகள்
32
29 மாவட்டங்களில் உள்ள 66 இதர உப வடிநிலப் பகுதிகளில்
மேற்கொள்ளப்படுவதன் மூலம், 4,778 ஏரிகள் மற்றும்
477 அணைக்கட்டுகள் புனரமைக்கப்படுவதுடன், 5.43 இலட்சம்
ஹெக்டேர் ஆயக்கட்டு நிலங்களும் பயனடையும். நீர்வள நிலவளத்
திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக, 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 814 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
53. உலக வங்கி உதவியுடன் 2012-2013 ஆம் ஆண்டு முதல்,
மாநிலத்தில் உள்ள 107 அணைகளில் 745.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,
‘அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு
வருகிறது. 22 அணைகளில் நடைபெற்ற பணிகள் நிறைவுற்ற
நிலையில், ஏனைய அணைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை இத்திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட மொத்தச் செலவு
195.30 கோடி ரூபாய் ஆகும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்,
இத்திட்டத்திற்காக 354 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
54. தாமிரபரணி நதியை நம்பியாற்றுடன் இணைப்பதற்கான
பணிகள் நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதல்
இரண்டு கட்டப் பணிகளை நிறைவு செய்வதற்காக 213 கோடி ரூபாய்
செலவிடப்பட்டுள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது கட்டப்
பணிகளைத் தொடங்குவதற்கான நில எடுப்புப் பணிகள் நடைபெற்று
வருகின்றன. இத்திட்டத்திற்காக, 2017-2018 ஆம் ஆண்டிற்கான
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிரிஷி சின்சாய்
யோஜனா’ (ஞஆமுளுலு) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும், )
‘விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ்,
அத்திக்கடவு-அவிநாசி பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல்
33
மற்றும் குடிநீர் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு
நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் அனுமதியை
எதிர்நோக்கி, 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக 250 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
55. நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு
நிதியின் கீழ் பாசன ஏரிகள், அணைக்கட்டுகள், கால்வாய்கள் மற்றும்
வாய்க்கால்களை அமைக்கவும், புனரமைக்கவும் 2011 ஆம் ஆண்டு முதல்
177 பணிகளை 935.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசு
மேற்கொண்டுள்ளது. அவற்றில், 453.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான
102 பணிகள் நிறைவடைந்துள்ளன. சிற்றாறிலிருந்து வெள்ள உபரி நீரைத்
திருப்பி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாசன ஏரிகளை
நிரப்புவதற்கான திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று
வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில், நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்
பாசனத் திட்டங்களுக்காக 279 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில், நீர்வள ஆதாரங்கள் துறைக்கு 4,791 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை
56. மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் குறைந்தபட்சம்
இருவழித்தடச் சாலைகளாகவும், மாவட்ட முக்கியச் சாலைகள்
அனைத்தையும் குறைந்தபட்சம் இடைவழித் தடங்களாகவும்
(ஐவேநசஅநனயைவந டயநே) அகலப்படுத்தப்படும் என 2011-2012 ஆம் ஆண்டில்
அறிவிக்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில் 864 கிலோமீட்டர்
34
நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் 507 கோடி ரூபாய் செலவில்
இருவழித்தடச் சாலைகளாகவும், 3,019 கிலோமீட்டர் நீளமுள்ள மாவட்ட
முக்கியச் சாலைகள் 1,555 கோடி ரூபாய் செலவில் இடைவழித்
தடங்களாகவும் அல்லது இருவழித்தடச் சாலைகளாகவும்
அகலப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 115 கிலோமீட்டர் நீளமுள்ள மாநில
நெடுஞ்சாலைகளும், 107 கிலோமீட்டர் நீளமுள்ள மாவட்ட முக்கியச்
சாலைகளும் 160 கோடி ரூபாய் செலவில், வரும் 2017-2018 ஆம் ஆண்டில்
அகலப்படுத்தப்படும்.
57. ‘ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத்
திட்டத்தின்’ (ஊசுஐனுஞ) கீழ், 2017-2018 ஆம் ஆண்டில் 1,000 கிலோமீட்டர் )
நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணிகளையும்,
3,000 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான
பணிகளையும், 200 பாலங்கள் / சிறு பாலங்கள் கட்டுவதற்கான
பணிகளையும் அரசு மேற்கொள்ளும். இத்திட்டத்திற்காக, 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 3,100 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு
ஒப்பந்தம் (ஞநசகடிசஅயnஉந க்ஷயளநன ஆயiவேநயேnஉந ஊடிவேசயஉவ)
அடிப்படையில், பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும்
திருவள்ளூர் கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும்
மாவட்ட முக்கியச் சாலைகளை மேம்படுத்தி பராமரிக்கும் பணிகள்
1,774.31 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2017-2018 ஆம் ஆண்டில் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு
ஒப்பந்த முறை விருதுநகர் கோட்டத்திற்கும் விரிவுபடுத்தப்படும்.
58. சாலைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் இந்த
அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அதிக சாலை விபத்துக்கள்
ஏற்படும் இடங்களில் (க்ஷடயஉம ளுயீடிவ) உள்ள குறைபாடுகளை
35
சரிசெய்வதற்கான விரிவானதொரு திட்டம் 1,130 கோடி ரூபாய் செலவில்
தயாரிக்கப்பட்டு, அதில் 959.94 கோடி ரூபாய் செலவிலான 3,382 பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு
மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 200 கோடி ரூபாய் செலவிலான சாலைப்
பாதுகாப்புத் திட்டங்களும், சிறப்பு சாலைப் பாதுகாப்புத் திட்ட நிதியின் கீழ்
100 கோடி ரூபாய் செலவிலான பணிகளும் 2017-2018 ஆம் ஆண்டில்
மேற்கொள்ளப்படும்.
59. உலக வங்கி கடன் உதவியுடன் ‘தமிழ்நாடு சாலை
மேம்பாட்டுத் திட்டத்தின்’ இரண்டாவது கட்ட திட்டத்தை (கூசூசுளுஞ-ஐஐ)
5,171 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது
427 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை தரம் உயர்த்துவதற்காகவும்,
597 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளைப் பராமரிப்பதற்குமான பணிகள்
நடைபெற்று வருகின்றன. அரசு-தனியார் பங்களிப்பு முறையில்
1,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 146 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை
நான்குவழிச் சாலைகளாகத் தரம் உயர்த்துவதற்கான பணிகள்
2017-2018 ஆம் ஆண்டில் துவங்கப்படும். 2017-2018 ஆம் ஆண்டிற்கான

1,508 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
60. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வேகமாக
ஏற்பட்டு வரும் நகரமயமாதல் மற்றும் தொழில் வளர்ச்சித் தேவைகளைக்
கருத்தில் கொண்டு, முக்கியமான நெடுஞ்சாலைகளை இணைக்கும்
141.60 கிலோமீட்டர் நீளமுள்ள ஒன்பது முக்கியமான இணைப்புச்
சாலைகளை, நான்குவழி அல்லது ஆறுவழிச் சாலைகளாகவும்
மேம்படுத்துவதற்கு 744 கோடி ரூபாய் அளவிலான பணிகள்
கண்டறியப்பட்டுள்ளன. இப்பணிகளில், 232.20 கோடி ரூபாய்க்கான
பணிகள் 2017-2018 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும்.
36
13,000 கோடி ரூபாய் செலவிலான சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டம்,
ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் (துஐஊஹ) ஆய்வில் உள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டப் பணியான, தேசிய நெடுஞ்சாலை எண் 5-ஐ
இணைக்கும், எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரையிலான வடக்கு
துறைமுக அணுகுசாலையை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள்
தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டப்பணிக்காக 951 கோடி ரூபாய்
அனுமதிக்கப்பட்டுள்ளது.
61. 2017-2018 ஆம் ஆண்டில் நபார்டு வங்கி கடனுதவியுடன்,
200 கோடி ரூபாய் செலவில் பாலங்கள் கட்டுவதற்கான பணிகளை இந்த
அரசு மேற்கொள்ளும். நெடுஞ்சாலைத் துறைக்காக, 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10,067 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எரிசக்தி
62. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா
அவர்களின் தலைமையின் கீழ், தொலைநோக்குப் பார்வை கொண்ட
அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, மின் பற்றாக்குறை
மாநிலமாக இருந்த தமிழ்நாடு, மின்சுயசார்பு நிலையை எட்டிய மாநிலமாக
மாறியுள்ளது. இதன் விளைவாக, 2011 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 1,040
யூனிட்டுகளாக இருந்த தனிநபர் மின் பயனீட்டு அளவு, 2015-2016 ஆம்
ஆண்டில் 1,280 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவின்
சராசரி தனிநபர் மின் பயனீட்டு அளவு 2015-2016 ஆம் ஆண்டில்
1,075 யூனிட்டுகளாக உள்ளது. மின் தேவையின் இந்தக் கூடுதல்
நுகர்வுக்கு ஏற்ப மாநில அரசும் சிறப்பான முறையில் மின்சாரம் வழங்கி
வருகிறது. 2011 ஆம் ஆண்டு முதல், மாநில மற்றும் மத்திய அரசு
முகமைகள் மூலம் 9,878 மெகாவாட் அளவிற்கு மாநில மின் உற்பத்தித்
37
திறன் அதிகரித்திருப்பது ஒரு மாபெரும் சாதனையாகும். மேலும்,
660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின்நிலைய
விரிவாக்கத் திட்டம், எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்
660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள்,
800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட வடசென்னை அனல்
மின்திட்டம் நிலை-ஐஐஐ மற்றும் உப்பூர் மிக உய்ய அனல் மின் திட்டத்தின்
800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள், கடலாடி
800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஐந்து மிக உய்ய அலகுகள்
மற்றும் உடன்குடியில் தலா 660 மெகாவாட் உற்பத்தித் திறன்
கொண்ட ஐ, ஐஐ, மற்றும் ஐஐஐ நிலையில் ஆறு அலகுகள் போன்றவற்றை
அமைப்பதற்கான பணிகளை இந்த அரசு விரைவுபடுத்தி வருகிறது.
63. காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உள்ளிட்ட
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவுதிறன், நாட்டிலேயே மிக அதிக அளவாக
தமிழ்நாட்டில் 10,206 மெகாவாட் ஆக உள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில்
இதுவரை, காற்றாலை மின்சாரம் வாயிலாக 13,431.78 மில்லியன் யூனிட்
அளவும், சூரிய மின்சக்தி வாயிலாக 1,721.37 மில்லியன் யூனிட் அளவும்
மாநிலத்தில் பெறப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரத்தை மின் தட்டுப்பாடு
உள்ள இதர மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல ஏதுவாக சிறப்புப் பசுமை
மின் வழித்தடம் ஒன்றை மத்திய அரசு மூலம் அமைத்திட இந்த அரசு
நடவடிக்கை எடுத்து வருகிறது.
64. மின்கடவுப் பாதைகளை வலுப்படுத்துவதற்காக, ஜெர்மன்
வளர்ச்சி வங்கி (முகறு) உதவியுடன் ‘பசுமை ஆற்றல் மின்தொடர்
திட்டத்தை’ 1,593 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி
வருகிறது. மேலும், 5,014 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜப்பான்
பன்னாட்டுக் கூட்டுறவு முகமை (துஐஊஹ) உதவியுடன் ‘தமிழ்நாடு
மின்தொடரமைப்பு மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
38
இத்திட்டங்களுக்காக, 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில் 974 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
65. மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்தில் தமிழ்நாடு
இணைந்துள்ளது. இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்
பகிர்மானக் கழகத்தின் 30,420 கோடி ரூபாய் அளவிலான கடன்
தொகையில் 75 சதவீதமான 22,815 கோடி ரூபாய் கடனை மாநில அரசே
ஏற்றுக்கொண்டு, அக்கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நிதியைத்
திரட்டுவதற்காக, வெளிச் சந்தையில் கடன் பத்திரங்களை வெளியிட்டு
வருகிறது. மீதமுள்ள 25 சதவீதமான 7,605 கோடி ரூபாய் கடன்,
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிடும் மின்
கடன் பத்திரங்களாக மாற்றப்படும். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்
பகிர்மானக் கழகத்தின் கடனை அரசு ஏற்பதால், அந்நிறுவனத்தின் வட்டிச்
செலவு ஆண்டிற்கு 2,882 கோடி ரூபாய் அளவிற்கும், மூலக் கடன்
(ஞசinஉiயீயட) திருப்பிச் செலுத்துவதற்கான செலவு ஆண்டிற்கு
2,282 கோடி ரூபாய் அளவிற்கும் நிதிச்சுமை குறையும். இது தவிர,
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் 25 சதவீதக் கடன்,
மின் கடன் பத்திரங்களாக மாற்றப்படுவதன் காரணமாக வட்டி விகிதம்
குறைவதால் அந்நிறுவனத்திற்கு, ஆண்டிற்கு 201 கோடி ரூபாய் சேமிப்பு
ஏற்படும். எனவே, உதய் திட்டத்தைச் செயல்படுத்தியதால்,
மாநில அரசுக்கும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்
கழகத்திற்கும் வட்டிச் செலவு குறைவதால், ஒட்டுமொத்தமாக
ஆண்டொன்றுக்கு 1,335 கோடி ரூபாய் அளவிற்கு சேமிப்பு ஏற்படும்.
66. இது தவிர, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்
கழகம் அரசிற்குச் செலுத்த வேண்டிய 4,523 கோடி ரூபாய் அளவிற்கான
கடன்கள், வழிவகை முன்பணங்கள், வட்டி மற்றும் அபராத வட்டி
ஆகியவற்றையும், 2016-2017 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்திற்கு பங்கு
39
மூலதன உதவியாக அரசால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால்,
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை மேலும்
வலுப்படும். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள புனல் மின் நிலையங்கள் அதன் வடிவமைப்பு
காலத்திற்கும் மேல் கடந்துவிட்ட நிலையில், ஒரு புதுமையான நிதி
திரட்டும் வழிமுறையாக, வருவாய்க் கடன் பத்திரங்கள் (சுநஎநரேந
க்ஷடினேள) மூலம் நிதி திரட்டி இவற்றைப் புதுப்பிக்க நடவடிக்கை
எடுக்கப்படும். இந்தப் புதுமையான நிதி திரட்டும் முயற்சியை தமிழ்நாடு
உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்தால் பராமரிக்கப்படும்
தமிழ்நாடு முதலீட்டு நிதியம் மேற்கொள்ளும். 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், விவசாயம் மற்றும்
இதர பயன்பாடுகளுக்கான மின்சார மானியமாக 8,538 கோடி ரூபாய்
உள்ளிட்ட 16,998 கோடி ரூபாய் எரிசக்தித் துறைக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து
67. 2016-2017 ஆம் ஆண்டில், 2,000 புதிய பேருந்துகளையும்,
100 சிற்றுந்துகளையும் வாங்குவதற்கு இந்த அரசு 275 கோடி ரூபாய்
அனுமதி அளித்துள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில், 800 கோடி ரூபாய் டீசல் மானியத்திற்காகவும்,
564 கோடி ரூபாய் மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பயணச்
சலுகைக் கட்டண மானியத்திற்காகவும், 150 கோடி ரூபாய் பங்கு மூலதன
உதவிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக போக்குவரத்துத்
துறைக்கு 2,192 கோடி ரூபாய் இந்த நிதிநிலை அறிக்கையில்
ஒதுக்கப்பட்டுள்ளது.
40
சென்னை மெட்ரோ இரயில் திட்டம்
68. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தில் 45 கிலோமீட்டர்
நீளத்திற்கு தொடங்கப்பட்ட முதற்கட்டப் பணிகளில் கோயம்பேட்டில்
இருந்து பரங்கிமலை மற்றும் சின்னமலையிலிருந்து விமான நிலையம்
வரையிலான 21 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்த்தப்பட்ட வழித்தடத்தில்
பயணிகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சுரங்க வழித்தடப் பகுதிகளின்
பணிகளில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு
முதல் நேரு பூங்கா வரையிலான முதல் சுரங்க வழித்தடப் பகுதியில்
பயணிகள் சேவை விரைவில் தொடங்கப்படும். சென்னை மெட்ரோ
இரயில் திட்டத்தின் முதல் வழித்தடத்தை வண்ணாரப்பேட்டையிலிருந்து
திருவொற்றியூர் / விம்கோ நகர் வரையிலான ஒன்பது கிலோமீட்டர்
நீளத்திற்கு நீட்டிப்புப் பணிகள் 3,770 கோடி ரூபாய் செலவில்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மெட்ரோ இரயில் திட்டத்தின்
இரண்டாம் கட்டப் பணிகளாக, மொத்தம் 107.5 கிலோமீட்டர் நீளம்
கொண்ட மூன்று மெட்ரோ இரயில் வழித்தடங்கள் ஜப்பான் பன்னாட்டுக்
கூட்டுறவு முகமையின் சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது
என்பதையும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில்
மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்பதையும் தெரிவிப்பதில் நான்
மகிழ்ச்சி அடைகிறேன்.
சுற்றுலா
69. அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளினால்,
கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டிலேயே அதிக அளவிலான உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தமிழ்நாடுதான் ஈர்த்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன், 135 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
செயல்படுத்தப்பட்டு வரும் ‘தமிழ்நாடு சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்பாட்டு
41
முதலீட்டுத் திட்டத்தின்’ முதல் கட்டப் பணிகள் விரைவில் நிறைவு
செய்யப்படும். இத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை,
2017-2018 ஆம் ஆண்டில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு
தொடங்கும்.
70. ‘புனித யாத்திரைக்கு புத்துணர்ச்சி அளித்தல் மற்றும்
ஆன்மீகத்தை ஊக்குவிப்பதற்கான திட்டத்தின்’ கீழ், காஞ்சிபுரம் மற்றும்
வேளாங்கண்ணியில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுத்
திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 2017-2018 ஆம் ஆண்டில்
சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை,
மாமல்லபுரம், இராமேஸ்வரம், மணப்பாடு மற்றும் கன்னியாகுமரி
ஆகிய கடற்கரை சுற்றுலாச் சுற்றுகளில் மேம்பாட்டுப் பணிகள்
மேற்கொள்ளப்படும். கலாச்சார மற்றும் புராதன சுற்றுலாவை மேம்படுத்த
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு உட்கட்டமைப்பு
நிதி மேலாண்மை நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் ஒரு புதிய
திட்டத்தைச் செயல்படுத்தும். இத்திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள்,
இந்து சமய அறநிலையத் துறையுடன் ஒருங்கிணைந்து அடிப்படை
வசதிகள் மற்றும் சுற்றுலாக் கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்நாட்டு,
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
இந்து சமய அறநிலையத் துறை
71. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா
அவர்களால் தொடங்கப்பட்ட அன்னதானத் திட்டம், 751 கோயில்களில்
தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2016-2017 ஆம் ஆண்டில்,
54.46 கோடி ரூபாய் செலவில் 901 கோயில்கள்
புதுப்பிக்கப்பட்டுள்ளதோடு, குடமுழுக்கும் நடத்தப்பட்டுள்ளது.
42
2017-2018 ஆம் ஆண்டில், கிராமக் கோயில்களைப் புதுப்பிப்பதற்காக
கோயில் ஒன்றிற்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதுடன்,
இத்திட்டத்தில் பயன்பெறும் கோயில்களின் எண்ணிக்கை
500 கோயில்களிலிருந்து 1,000 கோயில்களாக இரட்டிக்கப்படும். கோயில்
நிலங்கள் அபகரிப்பைத் தடுக்கவும், கோயில்களின் வருமானத்தைப்
பாதுகாப்பதற்காகவும், தனியார் பெயரில் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்ட
கோயில் நிலங்களுக்கான பட்டாக்களை, மீண்டும் கோயில்களின் பெயரில்
அரசு மாற்றம் செய்து வருகிறது. இதுவரை, 889 கோயில்களுக்குச்
சொந்தமான 5,473.64 ஏக்கர் நிலங்கள் இவ்வாறாக கோயில்களின்
பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பவியல்
72. தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சார்ந்த சேவை நிறுவனங்களை ஈர்க்க, மென்பொருள் மற்றும் வன்பொருள்
உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஊக்குவித்து, முனைப்பான
நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மென்பொருள் ஏற்றுமதி சீராக வளர்ந்து வருவதால், 2016-2017 ஆம்
ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியின் மதிப்பு
1,00,300 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு
இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை
உருவாக்கியுள்ளது. நடப்பு ஆண்டில், சோழிங்கநல்லூரில் கூடுதலாக ஒரு
தொழில்நுட்பப் பூங்காவும், சென்னையில் ஏற்கெனவே இயங்கிவரும்
தொழில் தொடங்குவோர் மையம் போன்று, கோயம்புத்தூரில் ஒரு
மையமும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மத்திய அரசின் உதவியுடன்,
ஸ்ரீபெரும்புதூரில் ஒரு மின்னணு வன்பொருள் தொழில் மண்டலத்தை
(நுடநஉவசடிniஉ ழயசனறயசந ஐனேரளவசல ழரb) ஏற்படுத்திட மாநில அரசு
நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அரசால் எடுக்கப்பட்ட பெரும்
43
முயற்சிகளால், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சார்ந்த சேவைகளில் தமிழகம் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் என
நான் தெரிவித்துக் கொள்கிறேன். 2017-2018 ஆம் ஆண்டிற்கான
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தகவல் தொழில்நுட்பவியல்
துறைக்காக 116 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சி
73. எளிதில் தொழில் தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்தி
கூடுதல் முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும்,
மாநிலத்தை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக திகழச் செய்யவும்
அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
2016 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் தேசியப் பயனுறு பொருளாதார
ஆய்வுக்குழு (சூயவiடியேட ஊடிரnஉடை டிக ஹயீயீடநைன நுஉடிnடிஅiஉ சுநளநயசஉh),
அதன், மாநில முதலீட்டு உள்ளாற்றல் குறியீட்டு அறிக்கையை
(ளுவயவந ஐnஎநளவஅநவே ஞடிவநவேயைட ஐனேநஒ) வெளியிட்டுள்ளது. இந்த
அறிக்கையின்படி, நாட்டிலேயே நடுத்தர முதலீட்டு முடிவுகளில் மூன்றாம்
இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
74. தொழில் துவங்குவதற்குத் தேவையான அனைத்து
அனுமதிகளையும் உரிய துறைகளிடமிருந்து பெற்று வழங்குவதற்கு
ஏதுவாக ஒற்றைச் சாளர முறை (ளுiபேடந றுiனேடிற ளுலளவநஅ) தமிழ்நாடு
தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில்
நடைமுறையில் உள்ளது. சிரமம் இன்றி அனைத்து ஒப்புதல்களையும்
ஓரிடத்தில் இணையதளம் (டிடேiநே) மூலம் விரைவில் பெறும் வகையில்,
இந்த முறை மேலும் வலுப்படுத்தப்படும். இந்த அனுமதிகளை, உரிய
துறைகள் விரைவாக வழங்குவதை கண்காணிப்பதற்கு, தலைமைச்
செயலரின் தலைமையின் கீழ் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
44
மாநிலத்தின் தென் மாவட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான
சிறப்புத் தொகுப்பு உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடத்தை செயல்படுத்துவதற்கு,
மாநில அரசு எடுத்துவரும் முயற்சிகள் மூலம், தமிழ்நாட்டின்
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கென ஒதுக்குவதற்கு 3,957
ஏக்கர் நில வங்கி, அரசிடம் தயார் நிலையில் உள்ளது. 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மூலதன
மானியமாகவும், குறைந்த வட்டியுடன் கூடிய கடன்கள் வழங்குவதற்கான
மானியமாகவும் மொத்தம் 1,950 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
75. மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க, ஜப்பான்
பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன், ‘தமிழ்நாடு முதலீடு
ஊக்குவிப்புத் திட்டத்தின்’ இரண்டாம் கட்டத் திட்டத்தினை
(கூயஅடை சூயனர ஐnஎநளவஅநவே ஞசடிஅடிவiடிn ஞசடிபசயஅஅந ஞாயளந-ஐஐ),
1,295 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2017-2018 ஆம் ஆண்டு முதல் அரசு
செயல்படுத்தும். இத்திட்டம், தொழில் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு
வசதிகளை வலுப்படுத்துவதுடன், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய
ஏதுவான சிறந்த கொள்கைச் சூழலையும் ஏற்படுத்தும்.
76. நாட்டிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு
திகழ்வதை எடுத்துக்காட்டும் வகையிலும், அந்நிலையை தக்கவைத்துக்
கொள்வதற்காகவும், 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 9 மற்றும் 10
ஆகிய நாட்களில், முதன்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு
சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது.
இம்மாநாட்டில், 4.70 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு
அளிக்கக்கூடிய வகையில், 2.42 இலட்சம் கோடி ரூபாய் அளவிலான
45
தொழில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்யும், 98 புரிந்துணர்வு
ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தொழில் முதலீடுகளை தொடர்ந்து
ஈர்ப்பதற்காக, ஏற்கெனவே திட்டமிட்டபடி அடுத்த உலக முதலீட்டாளர்கள்
மாநாட்டை வரும் நிதியாண்டில் நடத்துவதற்காக, 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 75 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
77. காஞ்சிபுரம் மாவட்டத்தில், வல்லம்-வடகால் சிப்காட்
தொழிற்பேட்டையில், 268 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் வானூர்தி
பூங்காவில் 350 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வானூர்திகளுக்கான
உயர் கணினிப் பொறியியல் மற்றும் வடிவமைப்பு மையம் அமைக்கப்பட்டு
வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில்
264 கோடி ரூபாய் முதலீட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திப் பூங்கா
ஒன்றினை சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு தொழில்
வளர்ச்சி நிறுவனம் உருவாக்கி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில்
130 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவப்
பூங்காவினை உருவாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முக்கிய
பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்,
அதன் இரண்டாவது அலகின் திறனை 2,100 கோடி ரூபாய் முதலீட்டில்
அதிகரிக்க உள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில், தொழில் துறைக்காக 2,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்
78. நாட்டிலேயே அதிகபட்சமாக, 94.83 இலட்சம்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 14.89 இலட்சம்
46
பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்,
தமிழகத்தில் இயங்கி வருகின்றன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ
ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட புதுமைத் திட்டமான, புதிய
தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டம், மாநிலத்தில்
முதல் தலைமுறைத் தொழில் முனைவோர் புதிய தொழில்களை
தொடங்குவதற்கு உதவியாக உள்ளது. மேலும், புதிதாகத் தொழில்
தொடங்குவோர் மற்றும் முதல் தலைமுறைத் தொழில் முனைவோர்
நம்பிக்கையுடன் தொழில் தொடங்க உரிய முதலீட்டுச் சூழலை
ஏற்படுத்தும் வகையிலும், உற்பத்தியில் புதுமை முயற்சிகளை
ஊக்குவிக்கவும், 2017 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு
வரையிலான காலகட்டத்திற்கான செயல்திட்டம் ஒன்றை தமிழ்நாடு
தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (நுவேநசயீசநநேரசளாiயீ
னுநஎநடடியீஅநவே ஐளேவவைரவந) உருவாக்கியுள்ளது. தொழில் துவக்கம் முதல்
உற்பத்தித் தொடக்கம் வரை உள்ள உயர் சந்தைப் பயிற்சி, தொடர்
வழிகாட்டுதல், வலைப் பின்னலமைப்பு மற்றும் தகவல் சேவைகள்
ஆகிய பயிற்சிகள் மூலம் தொழில் நிறுவனத்தை திறம்பட நடத்தும்
தன்மைகளை வளர்த்துக்கொள்ள தொழில் முனைவோருக்கு இத்திட்டம்
மூலம் உதவி செய்யப்படும். இதற்கான செலவினம், 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், புதிய தொழில்
முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கீடு
செய்யப்படும் 100 கோடி ரூபாய் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.
79. குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் தொகுப்பு மேம்பாட்டுத்
திட்டப் பணிகளுக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மற்றும் கரூர்
மாவட்டங்களில் தலா ஒரு ஜவுளிக் குழுமம், தருமபுரியில் ஒரு உணவுப்
பொருட்கள் குழுமம், இராமநாதபுரத்தில் ஒரு கடல் உணவுக் குழுமம்
ஆகிய நான்கு இடங்களில் குழுமங்களை அமைக்கும் திட்டம், ‘தமிழ்நாடு
47
முதலீடு ஊக்குவிப்புத் திட்டத்தின்’ (கூயஅடை சூயனர ஐnஎநளவஅநவே
ஞசடிஅடிவiடிn ஞசடிபசயஅஅந ஞாயளந-2) இரண்டாம் கட்டத்தின் கீழ்,
ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன்
100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். நெகமம், பூதலூர்
மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில், மதிப்புக் கூட்டப்பட்ட தென்னை நார்
மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களாகிய, கட்டுமானப் பொருட்கள்,
சுற்றுச் சூழலுக்கேற்ற நிலவளை பொருட்கள் (ழுநடி-வநஒவடைநள), தென்னை
நார் ஒட்டுப் பலகைகள், தென்னை நார் இழைமக் கட்டிகள் (உடிசை யீiவா
டெடிஉமள) உள்ளிட்ட பொருட்கள் தயாரித்திட, 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
மூன்று தென்னை நார் கயிறு குழுமங்கள் ஏற்படுத்தப்படும்.
தனியார் தொழிற்பேட்டைகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்தின் கீழ்
நான்கு திட்டங்களுக்கு 30.45 கோடி ரூபாய் மானியம் வழங்க
இதுவரையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 42.56 கோடி ரூபாய்
மானியம் வழங்க ஐந்து திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. புதிய
குழுமங்கள் அமைக்கவும், தொழிற்பேட்டைகளை மேம்படுத்தவும்,
தனியார் தொழிற்பேட்டைகளை ஊக்குவிக்கவும் இந்த அரசு தொடர்ந்து
நடவடிக்கை எடுக்கும்.
80. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அலகுகள்,
நிலைக்கத்தக்க தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக
உள்ளதாலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாலும்,
அரசு அதனை ஊக்குவிக்கிறது. எனவே, பின்வரும் சிறப்புத் திட்டங்கள்
மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை இந்த அரசு மேலும்
ஊக்குவிக்கும்.
• குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான மூலதன
மானிய ஒதுக்கீடு, தற்போதைய அளவான
48
80 கோடி ரூபாயிலிருந்து, 2017-2018 ஆம் ஆண்டிற்கு இரு
மடங்காக அதாவது 160 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
• மதுரை, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் வணிக
ஊக்குவிப்பு மையங்களை (கூசயனந குயஉடைவையவiடிn ஊநவேசந)
அமைத்திட, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்
சங்கங்களுக்கு தலா ஐந்து கோடி ரூபாய் நிதிக்கு மிகாமல்
50 சதவீத மானியத்தை அரசு வழங்கும். 2017-2018 ஆம்
ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
• தமிழ்நாட்டில் இத்தகைய தொழில் அலகுகளுக்கு சந்தை
வாய்ப்புகளை பரவலாக்கிடும் பொருட்டு, பன்னாட்டு
வர்த்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படும்.
இதற்காக 2017-2018 ஆம் ஆண்டிற்கு 10 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும்
அயல்நாட்டுச் சந்தையில் போட்டியிடுவதற்கான திறனை
அதிகரிப்பதற்கு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்றுமதியை
ஊக்குவித்தல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு ஆதரவு
அளிப்பதற்கான ஒரு சிறப்புத் திட்டம் தொடங்கப்படும்.
• குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அலகுகளில்
மின் சேமிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு சிறப்புத் திட்டம்
ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். குறு,
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அலகுகளுக்கு மின்திறன்
தணிக்கையின் அடிப்படையில் உரிய சலுகைகள்
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
49
• குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அலகுகளின் தரம்
மற்றும் போட்டித் தன்மையை மேம்படுத்திட, மூன்று தரக்
கட்டுப்பாடு மற்றும் பரிசோதனை ஆய்வகங்கள் சிட்கோ
பூங்காக்களில் நிறுவப்படும்.
• குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அலகுகள்
செயலிழந்துள்ளதன் காரணங்களை தொழில் வாரியாக
கண்டறிவதற்கும், அத்தகைய தொழில்கள் மீண்டும்
செயல்பட புத்துயிரூட்டுவதற்கும் உரிய உதவி செய்ய அரசு
ஒரு சிறப்பு ஆய்வை மேற்கொள்ளும்.
81. மேற்கண்ட நடவடிக்கைகள், இத்தகைய தொழில்களில்
ஈடுபட்டுள்ளோரின் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும் என
நம்புகிறேன். 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைக்கு
532 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, 2016-2017 ஆம்
ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டைவிட 53 சதவீதம்
அதிகமாகும்.
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை
82. கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிப்பதற்காக
விலையில்லா சேலைகள், வேட்டிகள் வழங்கும் திட்டத்தையும், தள்ளுபடி
மானியத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், விலையில்லா
சேலைகள் மற்றும் வேட்டிகள் வழங்கும் திட்டத்திற்காக 490 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வோதய சங்கங்கள் கதர் பொருட்களை
உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தைக்
50
கருத்தில் கொண்டு, அச்சங்கங்களுக்கு வழங்கப்படும் சந்தை
மேம்பாட்டுக்கான நிதியுதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும்
15 கோடி ரூபாய், 2017-2018 ஆம் ஆண்டிற்கு 30 கோடி ரூபாயாக
உயர்த்தப்படும். மேலும், கைத்தறி விற்பனைக்கு வழங்கப்படும் தள்ளுபடி
மானிய நிதியுதவியானது, 2017-2018 ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய்
அளவிற்கு உயர்த்தப்படும். அதேபோன்று, கதர் மற்றும் கிராமத் தொழில்
வாரியத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சந்தை மேம்பாட்டுக்கான
நிதியுதவி இரட்டிப்பாக்கப்பட்டு, 2017-2018 ஆம் ஆண்டில்
நான்கு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
83. கன்னியாகுமரி மற்றும் மாமல்லபுரத்தில் நகரக விற்பனை
கண்காட்சித் திடல்கள் (ருசயெn ழயவவ) அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து,
உதகமண்டலத்தில் மூன்றாவது நகரக விற்பனை கண்காட்சித் திடல்
2017-2018 ஆம் ஆண்டில், 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மேலும், நலிவடைந்து வரும் கைவினைத் தொழில்களைப்
பேணிப் பாதுகாப்பதற்காகவும், அத்தொழில்களை மீட்டெடுப்பதற்காகவும்
2.50 கோடி ரூபாய் செலவில் ஐந்து தொழில் குழுமங்கள் ஏற்படுத்தப்படும்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்காக 1,235 கோடி ரூபாயும், கைத்திறன்
மற்றும் கதர்த் துறைக்காக 194 கோடி ரூபாயும் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி
84. ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்
திட்டத்தை’ (ஆழுசூசுநுழுளு) தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி
வருகிறது. மாநிலத்தின் இத்திட்டச் செயலாக்கம் குறித்து மத்திய அரசு
வெகுவாகப் பாராட்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில்
51
மேற்கொள்ளப்பட்டு வரும் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்,
கழிவறைகள் கட்டுதல், மரம் நடுதல், கோழி மற்றும் கால்நடைகள்
வளர்ப்புக் கொட்டகைகள் அமைத்தல் போன்ற புதுமையான பணிகளைத்
தழுவி, தற்போது தேசிய அளவில் இவை செயல்படுத்தப்பட்டு
வருகின்றன. தற்போது நிலவி வரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு,
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை நாட்களின் எண்ணிக்கை
நூறிலிருந்து நூற்று ஐம்பதாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் முதல், தொழிலாளர் கூலிக்கான (றயபந உடிஅயீடிநேவே)
தொகை முழுவதையும் இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு வங்கி மூலம்
மத்திய அரசே நேரடியாக விடுவித்து வருகிறது. பொருட்களுக்கான
செலவில் (அயவநசயைட உடிஅயீடிநேவே) மத்திய அரசு அதன் பங்கான
75 சதவீதத்தை, மாநில வரவு-செலவுத் திட்டத்தின் வழியாக விடுவித்து
வருகிறது. இதனால், மாநில அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் மகாத்மா
காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக ஒதுக்கீடு
செய்யப்படும் தொகை பெருமளவில் குறைந்துள்ளது. 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 1,000 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
85. ‘பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின்’
(ஞசயனாயn ஆயவேசi ழுசயஅ ளுயனயம லுடிதயயே) பதினொன்றாவது கட்டப்
பணிகளின் கீழ், 792 சாலைகள் மற்றும் 12 பாலங்களை மேம்படுத்தவும்,
தரம் உயர்த்துவதற்குமான பணிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.

பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ் 758 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத்
திட்டத்தின் (கூயஅடை சூயனர சுரசயட சுடியனள ஐஅயீசடிஎநஅநவே ளுஉhநஅந) கீழ்
52
சாலைப் பணிகளுக்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு
திட்டங்களிலிருந்து 800 கோடி ரூபாய் ஒருங்கிணைக்கப்படும்.
86. ‘சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்’
(ஆடுஹஊனுளு) கீழ் 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் 470 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக
வளர்ச்சித் துறைக்காக, 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில் 16,665 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம்
87. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 48.40 சதவீதம்
நகர்ப்புரங்களில் வசித்து வருகின்றனர். 2016-2017 ஆம் ஆண்டில்
‘திறன்மிகு நகரங்கள் இயக்கத்தின்’ (ளுஅயசவ ஊவைநைள ஆளைளiடிn) கீழ் மதுரை,
சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாநகராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன
என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். 2015-2016 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ், சென்னை
மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டு,
அவற்றிற்கான சிறப்பு நோக்கு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, திட்டப்
பணிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. 2016-2017 ஆம்
ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் ‘திறன்மிகு நகரங்கள்
இயக்கத்தின்’ கீழ் 772 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அட்டல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின்
(ஹஆசுருகூ) கீழ், 2015-2016 ஆம் ஆண்டில் 3,316.22 கோடி ரூபாய்
மதிப்பீட்டிலான பணிகளும், 2016-2017 ஆம் ஆண்டில்
3,834.49 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளும் 27 நகரங்களில்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2017-2018 ஆம் ஆண்டிற்கான
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் திறன்மிகு நகரங்கள் இயக்கம்
53
மற்றும் அட்டல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான
திட்டங்களுக்காக முறையே, 1,200 கோடி ரூபாய் மற்றும்
1,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘ஒருங்கிணைந்த
நகர்ப்புர மேம்பாட்டு இயக்கம்’ (ஐவேநபசயவநன ருசயெn னுநஎநடடியீஅநவே
ஆளைளiடிn) மற்றும் ‘சென்னைப் பெருநகர மேம்பாட்டு இயக்கம்’ (ஊhநnயேi
ஆநபய ஊவைல னுநஎநடடியீஅநவே ஆளைளiடிn) ஆகிய திட்டங்களின் கீழ்
நடைபெற்று வரும் பணிகளை நிறைவு செய்ய, 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் முறையே
386 கோடி ரூபாயும், 400 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
88. நகர்ப்புர உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மேலும்
ஊக்கமளிக்கும் வகையில், உலக வங்கி நிதியுதவியுடன்
2,451.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நிலையான நகர்ப்புர
வளர்ச்சித் திட்டத்தை’ (கூயஅடை சூயனர ளுரளவயiயேடெந ருசயெn னுநஎநடடியீஅநவே
ஞசடிபசயஅஅந) 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மாநில அரசு
செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஏழு நகர்ப்புர உள்ளாட்சி
அமைப்புகளில் 2,223.88 கோடி ரூபாய் செலவில் 13 திட்டங்கள்
எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை, 430.63 கோடி ரூபாய்
செலவிடப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்காக 563 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
89. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் நகராட்சி நிர்வாகத் துறைக்கு 13,996 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
54
குடிநீர் விநியோகம்
90. மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும்
சூழ்நிலையில், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய கடும் சவால்களை அரசு
சந்திக்க வேண்டியுள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்குப்
பருவமழைகளினால் கிடைக்க வேண்டிய மழைப் பொழிவில், மொத்தமாக
62 சதவீதம் குறைந்துள்ளதால், நிலத்தடி நீரின் அளவு மிகவும்
குறைந்துள்ளது. மேலும், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும்
நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே
நீர் இருப்பு உள்ளது. இந்த வறட்சியான சூழ்நிலையை சமாளிக்கும்
விதமாக, புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, ஏற்கெனவே உள்ள
ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகளைப் புதுப்பித்தல்,
விசை பம்புகளை மாற்றுதல் மற்றும் தேவையான பகுதிகளில் லாரிகள்
மூலம் குடிநீர் விநியோகம் செய்தல் போன்ற பணிகளை கிராமப்புறங்களில்
460 கோடி ரூபாய் செலவிலும், நகர்ப்புரங்களில் 150 கோடி ரூபாய்
செலவிலும் அரசு மேற்கொண்டு வருகிறது.
91. தேசிய ஊரகக் குடிநீர்த் திட்டம் போன்ற குடிநீர் வழங்கல்
திட்டங்களுக்கான ஒதுக்கீட்டினை மத்திய அரசு பெருமளவில்
குறைத்துள்ளபோதும், நபார்டு வங்கியின் நிதியுதவி மற்றும் மாநிலத்தின்
சொந்த நிதியிலிருந்து பல்வேறு குடிநீர்த் திட்டங்களை இந்த அரசு
தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 2016-2017 ஆம் ஆண்டில்
தேசிய ஊரகக் குடிநீர்த் திட்டத்தின் கீழ், 319 கோடி ரூபாய்
மதிப்பீட்டிலான பணிகளும், குறைந்தபட்ச தேவைகள் திட்டத்தின் கீழ்
186 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளும், நபார்டு வங்கி
நிதியுதவியுடன் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளும்

வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தேசிய ஊரகக் குடிநீர்த்
55
திட்டத்திற்கு 300 கோடி ரூபாயும், குறைந்தபட்ச தேவைகள் திட்டத்திற்கு
186 கோடி ரூபாயும், நபார்டு வங்கி நிதியுதவி அளிக்கும் திட்டங்களுக்கு
600 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
92. இரண்டு மாநகராட்சிகள், 17 நகராட்சிகள்,
49 பேரூராட்சிகள் மற்றும் 14,218 கிராமக் குடியிருப்புகளில் வசிக்கும்
101.67 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 55 குடிநீர் வழங்கும்
திட்டங்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், 4,465.81 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது. சென்னையுடன் இணைக்கப்பட்ட
27 பகுதிகளில் 599.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் விநியோகம்
செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அம்ருத்
திட்டத்தின் கீழ், ஐந்து மாநகராட்சிகள் மற்றும் இரண்டு நகராட்சிகளில்
வசிக்கும் 23.17 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஏழு குடிநீர்
வழங்கும் திட்டங்கள் 1,823.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தூய்மைத் தமிழகத்திற்கான இயக்கம்
93. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கழிவறைகள் கட்டி
பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், திடக்கழிவு மேலாண்மையை
செம்மைப்படுத்தவும் இந்த அரசு ‘தூய்மைத் தமிழகத்திற்கான
இயக்கத்தை’ துவக்கியுள்ளது. அனைத்து கிராமங்களிலும்
இத்திட்டத்தின் மூலம் 100 சதவீதம் சுகாதார இலக்கை அடைய
இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில்,
கிராமப்புறங்களில் 15.17 இலட்சம் வீட்டுக் கழிவறைகள், 50 சமூக சுகாதார
வளாகங்கள் கட்டும் பணிகள் 1,821.40 கோடி ரூபாய் செலவில்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2017-2018 ஆம் ஆண்டில் ‘தூய்மை இந்தியா
இயக்கத்தின் (ஊரகம்)’ கீழ், 24.28 இலட்சம் வீட்டுக் கழிவறைகளும்,
56
50 சமூக சுகாதார வளாகங்களும் கட்டப்படும். திடக்கழிவுகளை
சேகரித்தல், பிரித்தல் மற்றும் அகற்றுதல் போன்ற பணிகளுக்காக
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ்
65,874 பணியாளர்களை ‘தூய்மைக் காவலர்களாக’ இந்த அரசு
தொடர்ந்து பயன்படுத்தும். இந்த முயற்சியால், மாநிலத்தில் உள்ள
அனைத்து 12,524 கிராம ஊராட்சிகளும் திடக்கழிவு மேலாண்மைத்
திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஊரக தூய்மை
இந்தியா இயக்கத் திட்டத்திற்காக 980 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
94. நகர்ப்புரங்களிலும் கழிவறைகள் கட்டுவதற்கு இந்த அரசு
தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை
1.76 இலட்சம் தனிநபர் வீட்டுக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் 89,866 கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை தவிர,
11,540 பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 3,678
பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒன்பது மாநகராட்சிகள்,
107 நகராட்சிகள் மற்றும் 400 பேரூராட்சிகளில் 969 கோடி ரூபாய்
செலவில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச்
செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகர்ப்புர
உள்ளாட்சி அமைப்புகளிலும் திடக்கழிவுக் குப்பைகளைப் பிரித்தல் மற்றும்
மறுசுழற்சி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் திடக்கழிவு
மேலாண்மையை மேம்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
நகர்ப்புர தூய்மை இந்தியா இயக்க திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத்
திட்டத்தில் 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
57
ஏழைகளுக்கான வீட்டுவசதி இயக்கம்
95. தமிழ்நாட்டில் குடிசைகளற்ற கிராமங்களையும், குடிசைப்
பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்க இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்.
பல்வேறு திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதியை இணைத்து இந்த
இலக்கை அடைய 2016-2017 ஆம் ஆண்டில் ஏழைகளுக்கான வீட்டுவசதி
இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது.
96. ‘பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்)’
(ஞசயனாயn ஆயவேசi ஹறயயள லுடிதயயே - சுரசயட) கீழ் 2016-2017 ஆம்
ஆண்டில், தமிழ்நாட்டில் 1.78 இலட்சம் வீடுகளைக் கட்ட மத்திய அரசு
அனுமதி அளித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. 2016-2017 ஆம்
ஆண்டில் ‘முதலமைச்சரின் சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை
வீடுகள் திட்டத்தின்’ கீழ் மேலும் 20,000 வீடுகள் 420 கோடி ரூபாய்
செலவில் கட்டப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரி வீட்டுவசதித்
திட்டத்தின் (ஊரகம்) கீழ், 2017-2018 ஆம் ஆண்டில் வீடு ஒன்றுக்கு
1.70 இலட்சம் மதிப்பீட்டில் 1.76 இலட்சம் வீடுகளை இந்த அரசு கட்ட
உள்ளது. இதில் வீடு ஒன்றுக்கு மத்திய அரசின் பங்கு
72,000 ரூபாயாகவும், மாநில அரசின் பங்கு கான்கிரீட் கூரை
அமைக்க வழங்கப்படும் 50,000 ரூபாய் உட்பட 98,000 ரூபாயாகவும்
இருக்கும். எனவே, இந்த திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடான
3,082.39 கோடி ரூபாயில் 1,761.98 கோடி ரூபாய் மாநில அரசின் நிதிப்
பங்காகும். ‘முதலமைச்சரின் சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை
வீடுகள் திட்டத்தின்’ கீழ், 2017-2018 ஆம் ஆண்டில் 420 கோடி ரூபாய்
செலவில் 20,000 வீடுகள் கட்டப்படும். 2017-2018 ஆம் ஆண்டிற்கான
நிதிநிலை அறிக்கையில் மொத்தமாக 3,502.39 கோடி ரூபாய் செலவில்
1.96 இலட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
58
97. நகர்ப்புரங்களில், சுகாதாரமற்ற குடிசைப் பகுதிகளில்
வசிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக நீர்வழித் தடங்களில்
வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கி மறுவாழ்வு
அளிக்கவும்; ஏழைகள் மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் வாங்கும்
திறனுக்கேற்ப வீட்டுவசதி வாய்ப்புகளை பெருக்கவும் என இந்த இரட்டைச்
சவால்களை அரசு சந்தித்து வருகிறது. இத்தகைய குடும்பங்களுக்கு
வீடுகள் கட்டி வழங்கி மறுவாழ்வு அளிக்க தமிழ்நாடு குடிசைப் பகுதி
மாற்று வாரியத்தால் (கூசூளுஊக்ஷ) குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
2016-2017 ஆம் ஆண்டில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்
9,888 குடியிருப்புகளை 911.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி வருகிறது.
மேலும், பயனாளிகளின் பங்களிப்புடன் 5,503.08 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் 1,77,791 வீடுகளை பயனாளிகளே கட்டிக்கொள்ள அரசு
நிதியுதவி வழங்கியுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில் 2,000 கோடி ரூபாய்
திட்ட மதிப்பீட்டில் கூடுதலாக 20,000 குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசை
மாற்று வாரியத்தால் கட்டப்படும். இது தவிர, பயனாளிகளின்
பங்களிப்புடன் 3,250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு இலட்சம் வீடுகளை
பயனாளிகளே கட்டிக்கொள்ள அரசு நிதியுதவி வழங்கும். இது தவிர,
தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பழைய
குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும். இதன் மூலம் அதில்
தற்போதுள்ள 33,000 குடியிருப்புகளின் எண்ணிக்கை 50,000
குடியிருப்புகளாக உயர்த்தி கூடுதல் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க
வாய்ப்பு ஏற்படும்.
98. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு
வீட்டுவசதி அதிக அளவில் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி
வாரியம் (கூசூழக்ஷ) வீடுகளைக் கட்டி வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டில்,
3,707 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால்
59
ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் 22,178 குடியிருப்புப் பணிகளை
முடிப்பதுடன், 808 கோடி ரூபாய் செலவில் 3,300 புதிய குடியிருப்புகளும்
கட்டப்படும். குறைந்த வருவாய்ப் பிரிவினர் (டுஐழு) மற்றும்
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (நுறுளு) அவர்களின்
வாங்கும் திறனுக்கேற்ப போதிய வீட்டுவசதியை கிடைக்கச் செய்வதற்காக
(ஹககடிசனயடெந hடிரளiபே) தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக்
கழகத்தின் மூலம் வீட்டுவசதி நிதியத்தை (ளுhநடவநச கரனே)
செயல்முறைக்குக் கொண்டுவந்து தனியார் முதலீட்டையும் அதிக
அளவில் ஈர்த்து புதுமையான நிதி திரட்டும் முயற்சிகள் மூலம் குறிப்பாக
தாக்கத்தை தணிக்கும் முதலீட்டாளர்கள் நிதியையும் (ஐஅயீயஉவ
ஐnஎநளவடிசள) திரட்டி குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும்
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான வீடுகளை அதிக அளவில்
கட்டி வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த முயற்சியில்
தேசிய வீட்டுவசதி வங்கியும் பங்கு கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப்பகிர்வு
99. 2012-2013 முதல் 2016-2017 ஆம் ஆண்டு வரை
உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் மானியத்திலிருந்து,
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 21,951 கோடி ரூபாயும், நகர்ப்புர
உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15,499 கோடி ரூபாயும் மாநில அரசு
பகிர்ந்தளித்துள்ளது. ஐந்தாவது மாநில நிதிக்குழு தனது பரிந்துரைகளை
சமீபத்தில் அளித்துள்ளது. மாநில அரசும் இந்த அறிக்கையை
ஏற்றுக்கொண்டுள்ளது. ஐந்தாவது நிதிக்குழு அறிக்கை தொடர்பாக
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, இந்தக் கூட்டத் தொடரில்
விரிவான அறிக்கை அவையில் வைக்கப்படும். பதினான்காவது
மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு,
60
பொதுவான அடிப்படை நிதியுதவியாக (ழுநநேசயட க்ஷயளiஉ ழுசயவேள)
2,780 கோடி ரூபாயும், பொதுவான செயல்பாட்டு நிதியுதவியாக (ழுநநேசயட
ஞநசகடிசஅயnஉந ழுசயவேள) 560 கோடி ரூபாயும், 2017-2018 ஆம் ஆண்டில்
கிடைக்கும். மேலும், ஐந்தாவது மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி,
கிராமப்புற மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையே
5,159 கோடி ரூபாயும் மற்றும் 4,054 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப்படும்.
ஆக மொத்தம் 2017-2018 ஆம் ஆண்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புர
உள்ளாட்சி அமைப்புகள் முறையே 6,870 கோடி ரூபாயையும்,
5,683 கோடி ரூபாயையும் இதன் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் மானியமாகப்
பெறும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்
100. அரசியலில் பெண்கள் அதிகாரம் பெறும் வகையில்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளில் அவர்களுக்கான
இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில தேர்தல்
ஆணையம் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான
ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இச்செலவினங்களுக்காக
2017-2018 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்
174 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு
101. ஆரம்ப சுகாதாரம், இரண்டாம் நிலை மற்றும் உயர் நிலை
மருத்துவமனைகளில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைப்
பணிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு
தொடர்ந்து எடுத்து வருகிறது. அரசு எடுத்த ஒருங்கிணைந்த
முயற்சிகளால் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாட்டின் நிலை கணிசமாக
61
மேம்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் ஆயிரம் குழந்தைகள் பிறப்புக்கு
24 என்ற அளவில் இருந்த பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (ஐகேயவே
ஆடிசவயடவைல சுயவந), 2015 ஆம் ஆண்டில் 19 ஆகக் குறைந்துள்ளது.
இதேபோன்று, 2010 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் குழந்தை பிறப்புக்கு
79 என்ற அளவில் இருந்த மகப்பேறு இறப்பு விகிதம் (ஆயவநசயேட ஆடிசவயடவைல
சுயவiடி) 2016 ஆம் ஆண்டில் 67 ஆகக் குறைந்துள்ளது. தமிழ்நாடு
ஏற்கெனவே தேசிய இலக்குகளையும், மில்லினியம் வளர்ச்சி
இலக்குகளையும் அடைந்துள்ளதால், குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு
முன்னதாக நிலையான வளர்ச்சி இலக்குகளையும் (ளுரளவயiயேடெந
னுநஎநடடியீஅநவே ழுடியட) அடையும்.
102. இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல, பொது
மருத்துவக் கட்டமைப்பை இந்த அரசு தொடர்ந்து வலுப்படுத்துவதுடன்,
பயனாளிகள் சார்ந்த நலத்திட்டங்களையும் முனைப்போடு வழங்கி
வருகிறது. ஆரம்ப சுகாதார மருத்துவ வசதிகளை மேம்படுத்தும்
வகையில், ‘தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின்’ (சூயவiடியேட சுரசயட
ழநயடவா ஆளைளiடிn) கீழ், 2017-2018 ஆம் ஆண்டில் 43.76 கோடி ரூபாய்
செலவில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (ஞசiஅயசல ழநயடவா ஊநவேசநள)
புதிதாக அமைக்கப்படுவதுடன், 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள்
30 படுக்கைகள் கொண்ட, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார
நிலையங்களாகத் தரம் உயர்த்தப்படும். ‘தேசிய நகர்ப்புர சுகாதாரத்
திட்டத்தின்’ (சூயவiடியேட ருசயெn ழநயடவா ஆளைளiடிn) கீழ் நகர்ப்புர ஆரம்ப
சுகாதார நிலையங்களில் 15.09 கோடி ரூபாய் செலவில் 96 பல்நோக்கு
சிகிச்சை மையங்களை இந்த அரசு அமைக்கும்.
103. கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு புதிய மருத்துவக்
கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாலும், ஏற்கெனவே இருக்கும்
62
மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாலும்,
போதுமான தகுதி வாய்ந்த மருத்துவர்களின் இருப்பு எண்ணிக்கை
மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திலுள்ள அரசு
மருத்துவக் கல்லூரிகளில் 2011 ஆம் ஆண்டில் 1,945 ஆக இருந்த
மருத்துவப் பட்டப்படிப்புக்கான (ஆக்ஷக்ஷளு) இடங்களின் எண்ணிக்கை
2016-2017 ஆம் ஆண்டில் 2,750 ஆக உயர்ந்துள்ளது. இந்த அரசு எடுத்த
முயற்சியின் விளைவாக, 2016-2017 ஆம் ஆண்டில் 1,188 ஆக இருந்த
மருத்துவக் கல்விக்கான பட்ட மேற்படிப்பு இடங்களின் எண்ணிக்கை
2017-2018 ஆம் ஆண்டில் 1,362 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
104. 2016-2017 ஆம் ஆண்டிலிருந்து, நகர்ப்புரப் பகுதிகளில்
இரண்டாம் நிலை (ளுநஉடினேயசல) மற்றும் உயர் நிலை (கூநசவயைசல ழநயடவா
ஊயசந) மருத்துவ வசதிகளை மேம்படுத்த ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு
முகமையின் கடனுதவியுடன் ‘தமிழ்நாடு நகர்ப்புர மருத்துவக்
கட்டமைப்புத் திட்டத்தை’ 1,634 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு
செயல்படுத்தி வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கென 126 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
105. ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்
திட்டம்’ இந்த அரசின் ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தின்
கீழ், 1.58 கோடி குடும்பங்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில்
உயர்தர மருத்துவ வசதிகளைப் பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு
வழங்கப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில் 662.86 கோடி ரூபாய்
அளவிற்கு 3.39 இலட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள் ஈட்டிய வருவாயான
225.28 கோடி ரூபாய் மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டம் 2017 ஆம்
63
ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி முதல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதுடன்,
312 கூடுதல் சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டு சிறப்புச் சிகிச்சைகளுக்கு
இரண்டு இலட்சம் ரூபாயாக காப்பீட்டு அளவு உயர்த்தி
வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கென
1,348 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
106. மாநிலத்தில் சிசு இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு இறப்பு
விகிதங்களைக் குறைக்க உதவும் ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு
மகப்பேறு உதவித் திட்டத்தின்’ கீழ், 2016-2017 ஆம் ஆண்டில்
5.81 இலட்சம் கர்ப்பிணிப் பெண்கள் 551.61 கோடி ரூபாய் நிதியுதவி பெற்று
பயனடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்
நிதியுதவியை 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்க
ஆணையிட்டுள்ளார்கள். 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கென 1,001 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. ‘அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்’, ‘அம்மா
மகப்பேறு சஞ்சீவி’ திட்டங்களையும் இந்த அரசு தொடர்ந்து
செயல்படுத்தும். மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சானிட்டரி
நாப்கின்கள் வழங்க வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 61 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
107. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார
நிலையங்களிலும் மருந்துகளை இந்த அரசு இலவசமாக வழங்கி
வருகிறது. இது தவிர, குறைந்த விலையில் முக்கிய மருந்துகள்
கிடைக்கும் வகையில், வணிகக் குறியீடு இல்லாத பொது மருந்துகளின்
(ழுநநேசiஉ) பயன்பாடு ஊக்குவிக்கப்படும். வணிகக் குறியீடு இல்லாத )
பொது மருந்துகளை (ழுநநேசiஉ) விற்பனை செய்ய தமிழ்நாடு மருத்துவப் )
64
பணிகள் கழகத்தால் 10 விற்பனையகங்கள் அமைக்கப்படும். இதைத்
தொடர்ந்து இத்தகைய வணிகக் குறியீடு இல்லாத பொது மருந்துகளின்
(ழுநநேசiஉ) விற்பனைக் கடைகள் நகரின் முக்கிய இடங்களிலும், )
கிராமப்புறப் பகுதிகளிலும் கூட்டுறவு நிறுவனங்களால் அமைக்கப்படும்.
இந்த முயற்சி, மருந்து மற்றும் மருந்துப் பொருட்களுக்கான மக்களின்
செலவு சுமையை வெகுவாகக் குறைக்க உதவும்.
108. 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைக்காக
10,158 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி
109. கல்வி கற்பிக்கும் உபகரணங்கள் மூலமும், சிறந்த
கற்பிக்கும் முறைகளினாலும் மாணவர்களின் கற்கும் திறனை
அதிகரிக்கும் வகையில் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்க இந்த
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புவியியல் தகவல் முறைமையின்படி
(ழுநடிபசயயீhiஉ ஐகேடிசஅயவiடிn ளுலளவநஅ) தயாரிக்கப்பட்ட பள்ளி இருப்பிட
வரைபடச் செயலி உதவியுடன் கல்வி வசதி இல்லாத பகுதிகள் இந்த
அரசால் கண்டறியப்பட்டு 2011 ஆம் ஆண்டு முதல் 226 புதிய ஆரம்ப
பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பள்ளிகள் தொடங்குவதற்கு
சாத்தியமற்ற பகுதிகளில், வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில்
குழந்தைகளின் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து
உதவிகள் வழங்கப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டு முதல், 113 தொடக்கப்
பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப் பள்ளிகள்
உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்
பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து
2017-2018 ஆம் ஆண்டில், 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப்
65
பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும்
தரம் உயர்த்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த அரசால் கண்டறியப்பட்டுள்ள 36,930 பள்ளிக்குச் செல்லாத
குழந்தைகளை 2017-2018 ஆம் ஆண்டில் பள்ளிகளில் சேர்க்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
110. வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், குடிநீர்
வசதி, சுற்றுச்சுவர் மற்றும் சாய்வுதளங்கள், மாணவ, மாணவியருக்கான
தனித்தனிக் கழிவறைகள் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்பு
வசதிகளை பள்ளிகளில் ஏற்படுத்துவதற்கு இந்த அரசு சிறப்பு கவனம்
செலுத்தி வருகிறது. 2016-2017 ஆம் ஆண்டில், இத்தகைய
உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 440.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கழிவறைகளில் சுகாதாரத்தைப்
பேணுவதற்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 2016-2017 ஆம் ஆண்டில்
57.63 கோடி ரூபாய் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி
2017-2018 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். நபார்டு
வங்கியிடமிருந்து பெறப்படும் கடனுதவியையும் சேர்த்து பள்ளிகளின்
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2017-2018 ஆம் ஆண்டிற்கான
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
111. பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் குழந்தைகளை
ஊக்கப்படுத்தி இலவச மற்றும் கட்டாயக் கல்வி மூலம் அனைத்துக்
குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதற்கு உள்ள தடைகளை நீக்க இந்த
அரசு உறுதி பூண்டுள்ளது. மாணவ, மாணவியருக்கு நான்கு சீருடைத்
தொகுப்புகள், புத்தகப்பைகள், காலணிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப்
புத்தகங்கள் மற்றும் வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட கல்வி
கருவிகளையும், மிதிவண்டிகள் மற்றும் பேருந்துக் கட்டணச் சலுகைகள்
66
போன்றவற்றையும் இந்த அரசு விலையில்லாமல் தொடர்ந்து வழங்கும்.
2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்
மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக, 1,503 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. மேலும், 2017-2018 ஆம் ஆண்டு வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில் மடிக்கணினிகள் வழங்குவதற்காக
758 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
112. ‘குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டத்தின்’ கீழ் சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும்
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளைச் சார்ந்த குழந்தைகள்
தனியார் பள்ளிகளில் கல்வி பயில இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 3,28,910 குழந்தைகள்
பயனடைந்துள்ளனர். 2016-2017 ஆம் ஆண்டில் மட்டும்
97,506 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்திற்கென 201 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
113. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்து,
பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளின் பள்ளி
இடைநிற்றலைக் குறைக்கும் வகையில், சிறப்பு ஊக்கத்தொகையாக
மாணவியர் ஒவ்வொருவருக்கும் 5,000 ரூபாய் இந்த அரசால்
வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும்
திட்டத்திற்காக 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் 314 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
114. ‘அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (ளுயசஎய ளுhமைளாய
ஹbhலையn)’ கீழ், முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகைகள்
1,476 கோடி ரூபாயும், ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின்
67
(சுயளாவசலைய ஆயனாலயஅமை ளுhமைளாய ஹbhலையn)’ கீழ் 1,266 கோடி ரூபாயும்
மத்திய அரசு வழங்காத நிலையிலும், மாநில அரசு போதுமான நிதியை
ஒதுக்கீடு செய்து இத்திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக 2,656 கோடி ரூபாயும்,
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்திற்காக
1,194 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
115. 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் பள்ளிக் கல்விக்காக 26,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி
116. மாநிலத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளுடன்
தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே உயர்கல்விக்
கொள்கையின் அடித்தளமாக உள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும்
9.46 இலட்சம் மாணவ, மாணவியர்களைப் புதிதாகச் சேர்க்கும் வகையில்
584 பொறியியல் கல்லூரிகளும், 518 பலவகை தொழில்நுட்பக்
கல்லூரிகளும், 1,486 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் அரசு மற்றும்
தனியார் மேலாண்மையின் கீழ் இயங்கி வருகின்றன. கிராமப்புற மற்றும்
தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்கும்
வாய்ப்பை உயர்த்த, 2011 ஆம் ஆண்டிலிருந்து, 20 புதிய அரசு கலை
மற்றும் அறிவியல் கல்லூரிகளும், நான்கு புதிய பொறியியல்
கல்லூரிகளும், 16 புதிய பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளும்
நிறுவப்பட்டுள்ளன. மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
959 பாடத் திட்டங்கள் கூடுதலாக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
68
117. கல்வியில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து உயர்கல்வி
பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் நோக்குடன், முதல்
தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தை
அரசே திரும்ப வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 2016-2017 ஆம் ஆண்டில் 2.29 இலட்சம் மாணவ,
மாணவிகள் பயனடைந்துள்ளனர். 2017-2018 ஆம் ஆண்டிலும்
இத்திட்டத்தைச் செயல்படுத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்
680 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்ட
முயற்சிகளின் பயனாக, 2015-2016 ஆம் ஆண்டில் உயர்கல்வியில்
மாணவர் சேர்க்கை விகிதம் 44.30 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
பெண்கள் உயர்கல்விச் சேர்க்கை 2010-2011 ஆம் ஆண்டில்
2,51,293 லிருந்து, 2016-2017 ஆம் ஆண்டில் 3,02,522 ஆகவும்,
2010-2011 ஆம் ஆண்டில் ஆதி திராவிடர் பிரிவுகளைச் சார்ந்த மாணவ,
மாணவிகளின் சேர்க்கை 60,854 லிருந்து, 2016-2017 ஆம் ஆண்டில்
1,07,013 ஆகவும் உயர்ந்துள்ளது.
118. அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கான
139 கோடி ரூபாய் உட்பட, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும்
மானியம் வழங்குவதற்காக 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில் 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறைக்காக 3,680 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு
119. மாநிலத்தில் விளையாட்டுத் திறனை
மேம்படுத்துவதற்காக சிறப்பு முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து எடுத்து
69
வருகிறது. விளையாட்டு வீரர்கள் உடற்தகுதி மற்றும் அவர்களின் மன
உறுதியினை உயர்த்தி, திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில்
உதகமண்டலத்தில் 5 கோடி ரூபாய் செலவில் ‘மலை மேலிட
விளையாட்டுப் பயிற்சி மையத்தை’ இந்த அரசு நிறுவி வருகிறது.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில்
வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தினை அரசு மேம்படுத்தி வருகிறது.
2017-2018 ஆம் ஆண்டில் 12,524 கிராம ஊராட்சிகளில், கிராம
அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த 25 கோடி ரூபாயை இந்த
அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கென 165 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
120. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலனைப் பேணி
அவர்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காப்பதற்கான
அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.
தற்போது, 98,539 மாணவ, மாணவியருடன் 1,324 ஆதி திராவிடர்
விடுதிகளும், 2,782 மாணவ, மாணவியருடன் 42 பழங்குடியினர்
நல விடுதிகளும் மற்றும் 31,069 மாணவ, மாணவியருடன் 314 அரசு
பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளும் (ழுடிஎநசnஅநவே கூசiயெட
சுநளனைநவேயைட ளுஉhடிடிடள) இயங்கி வருகின்றன. மற்றுமொரு தேர்தல்
வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கல்லூரி விடுதி
மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு
875 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், பள்ளி விடுதி

755 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகவும் இந்த அரசு உயர்த்தி வழங்கும்.
70
மேலும், அனைத்து விடுதிகளுக்கும் சொந்தக் கட்டடங்களை கட்டவும்
இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக 30 விடுதிகள் கட்டும்
பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2017-2018 ஆம் ஆண்டில்
30.73 கோடி ரூபாய் செலவில் 24 கூடுதல் விடுதிகளுக்கான கட்டடங்கள்
கட்டும் பணியை இந்த அரசு மேற்கொள்ளும். இதற்கென
2017-2018 வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் கட்டடங்கள்
கட்டுவதற்காக 189 கோடி ரூபாயும், உணவுக் கட்டணங்களுக்காக
120 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
121. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்
பதினொன்றாம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்
மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள்
வழங்குவதற்கென 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் 69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி
திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த
பெண்குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்குடன்
4.92 இலட்சம் மாணவிகளுக்கு 2016-2017 ஆம் ஆண்டில் அரசு ஊக்க
உதவித்தொகை வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கென 2017-2018 ஆம்
ஆண்டிற்கு 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு
2.50 இலட்சம் ஆதி திராவிடர் மாணவ, மாணவிகள் மற்றும் 14,000
பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கும் 2016-2017 ஆம் ஆண்டில்
பள்ளிக் கல்விக்கான உதவித்தொகை வழங்கியுள்ளது. 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வி
உதவித்தொகை திட்டத்திற்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
122. உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்
மூலம் 2016-2017 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும்
71
கல்லூரிகளில் பயிலும் 1.23 இலட்சம் மாணவ, மாணவிகளும்,
தனியார் கல்லூரிகளில் பயிலும் 2.27 இலட்சம் மாணவ, மாணவிகளும்
பயனடைந்துள்ளனர். 2016-2017 ஆம் ஆண்டு வரை
1,927.32 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து பெறப்பட வேண்டியுள்ளது.
இத்திட்டத்திற்காக, 2016-2017 ஆம் ஆண்டில் மாநில அரசு
1,580 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. உயர்கல்வி உதவித்தொகைத்
திட்டத்திற்கென 2017-2018 ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளிலும் 1,580 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
123. தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்
கழகம் (கூஹழனுஊடீ) மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்
குடும்பங்களுக்கு நிதியுதவியை விரிவுபடுத்துவதன் மூலம் அவர்களது
சமூகப் பொருளாதார நிலை மேம்பாடு அடைய இந்த அரசு தொடர்ந்து
உதவி வருகிறது. மத்திய சிறப்பு உதவித் திட்டத்திற்காக, 2017-2018 ஆம்
ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 150 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
124. 2016-2017 ஆம் ஆண்டில், மொத்தம் 49.84 கோடி ரூபாய்
அனுமதிக்கப்பட்டு, நபார்டு வங்கி கடனுதவியுடன் 157 அரசு
பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் வனத்துறையால்
நடத்தப்படும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட
உள்ளன. பழங்குடியினர் பகுதிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாட்டு
வசதிகள் மேற்கொள்ளவும், பழங்குடியினக் குடும்பங்களின் சமூகப்
பொருளாதார மேம்பாட்டிற்கு நிதியுதவி வழங்கிடவும், 2011-2012 ஆம்
ஆண்டு முதல் ‘ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம்’
அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த அரசு, பழங்குடியின மாணவ,
மாணவியர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்தும்
வகையில், பழங்குடியின மாணவ, மாணவியர் தங்கி கல்வி பயிலும்
72
வகையில், ஜவ்வாது மலையில் இரண்டு உண்டு உறைவிட மாதிரிப்
பள்ளிகள் (ஆடினநட சுநளனைநவேயைட ளுஉhடிடிட) ஆசிரியர் குடியிருப்புகளுடன்
24 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன் பயனாக
அப்பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் மேல்நிலைப் பள்ளி வரை
கல்வி கற்பதற்கான வாய்ப்பினை பெறுவர். 2017-2018 ஆம் ஆண்டின்
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒருங்கிணைந்த பழங்குடியினர்
மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாயும், அழிவின் விளிம்பிலுள்ள
பண்டைய பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 37 கோடி ரூபாயும்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
125. 2017-2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் ஆதிதிராவிடர் நலத் துறைக்கென 3,009 கோடி ரூபாயும்,
பழங்குடியினர் நலத் துறைக்கென 265 கோடி ரூபாயும் ஒதுக்கப்படுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்
நலன்
126. இந்த அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் சமூகப் பொருளாதார
மேம்பாட்டையும் நலனையும் பேணுவதில் முனைப்போடு உள்ளது.
2016-2017 ஆம் ஆண்டில், 72,000 மாணவ, மாணவியருக்கு பள்ளிப்
படிப்புக்கான கல்வி உதவித்தொகையும், 7.02 இலட்சம் மாணவ
மாணவியருக்கு மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையும்
வழங்கப்பட்டுள்ளது. 2017-2018 வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்,
பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கென 23 கோடி ரூபாயும்,
மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கென 182 கோடி ரூபாயும்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
73
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு
விலையில்லா மிதிவண்டிகள் வழங்க 2017-2018 ஆம் ஆண்டிற்கான
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 180 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
127. இந்த அரசு 84,314 மாணவ, மாணவியர் பயன்பெறும் 1,338
விடுதிகளை நடத்தி வருகிறது. மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை
நிறைவேற்றும் வகையில், கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக்
கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு 875 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும்,
பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம்
ஒன்றிற்கு 755 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகவும் இந்த அரசு உயர்த்தி
வழங்கும். 2017-2018 ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில்
விடுதிகள் மற்றும் பள்ளிகளுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கு
24 கோடி ரூபாயும், உணவுக் கட்டணங்களுக்காக 84 கோடி ரூபாயும்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்காக
988 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலன்
128. மாநிலத்தில், தொழிலாளர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பிற
மாநிலங்களைச் சேர்ந்த 17,556 கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட
68.52 இலட்சம் உறுப்பினர்களுடன் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல
வாரியங்கள் உள்ளன. 2016-2017 ஆம் ஆண்டில், அமைப்புசாரா
தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்களுக்கு இதுவரை
115.25 கோடி ரூபாய் அளவிற்கான நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
74

இந்த நல வாரியங்களுக்கு மானியம் வழங்குவதற்காக 70 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
129. பிற மாநிலங்களைச் சார்ந்த கட்டுமான தொழிலாளர்கள்,
கட்டுமான பகுதிகளில் சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழும்
அவல நிலையைப் போக்க, சென்னை நகரை சுற்றியுள்ள பிற முக்கிய
நகரங்களிலும் தேவையின் அடிப்படையில் தற்காலிகக் குடியிருப்புகளை
அமைத்துத் தரும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
தங்களிடம் பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்களைத் தங்க
வைப்பதற்காக, கட்டுமான நிறுவனங்களுக்கு இந்தக் குடியிருப்புகள்
வாடகைக்கு அளிக்கப்படும். 2017-2018 ஆம் ஆண்டிற்கான .
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தொழிலாளர் நலத் துறைக்காக
1,010 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூக நலன்
130. மக்கள் நலம் பேணுவதில் முன்மாதிரி அரசாக உள்ள இந்த
அரசு, முதியோர், கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்
திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் போன்ற சமுதாயத்தில் எளிதில்
பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரிவினருக்கும், பொருளாதாரத்தில்
பின்தங்கிய பிரிவினருக்கும் சமூகப் பாதுகாப்பு உதவித் தொகையாக
மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி வருகிறது. பயனாளியின் வங்கிக்
கணக்கின் மூலம் இந்த மாதாந்திர உதவித் தொகை நேரடியாக
வழங்கப்பட்டு வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில், சமூகப் பாதுகாப்பு உதவித் தொகை வழங்கும்
திட்டத்திற்காக 3,790 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
75
131. மறைந்த முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களால்
துவக்கப்பட்ட முன்னோடித் திட்டங்களான ‘பெண் குழந்தைகள்
பாதுகாப்புத் திட்டம்’, ‘தொட்டில் குழந்தைத் திட்டம்’ ஆகியவை பெண்
குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கி வருகின்றன.

இத்திட்டங்களுக்காக 140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருமண உதவித் திட்டங்களின் கீழ், திருமாங்கல்யத்திற்காக எட்டு கிராம்
தங்கம் மற்றும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு 25,000 ரூபாயும், பட்டதாரி /
பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்பட்டு

மதிப்பீடுகளில், அனைத்து திருமண உதவித் திட்டங்களுக்காகவும்
723 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றுமொரு தேர்தல்
வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில், ஆண்டொன்றுக்கு
ஒரு இலட்சம் உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள்
வாங்குவதற்கு 20,000 ரூபாய் அளவிற்கு மிகாமல் 50 சதவீத மானியம்
வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கென
200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
132. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தின் அளவை உயர்த்தவும்,
பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், ‘புரட்சித்
தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தை’ 43,143 சத்துணவு
மையங்கள் மூலம் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ஐந்து வயதிற்கு
உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்
மற்றும் வளரிளம் பெண்கள் ஆகியோருக்கு ஊட்டச்சத்துமிக்க உணவும்,
இணை உணவும் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில், 54,439
அங்கன்வாடி மையங்கள் மூலம், ஒருங்கிணைந்த குழந்தைகள்
76
மேம்பாட்டுத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்
திட்டம் ஆகியவற்றுக்கு முறையே 1,687 கோடி ரூபாய் மற்றும்
1,779 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூக நலத்
துறைக்காக 4,781 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலன்
133. மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்
வகையில், மகப்பேறுகால விடுப்பினை ஆறு மாதத்திலிருந்து ஒன்பது
மாதமாக மாநில அரசு உயர்த்தியுள்ளது. ஏழாவது மத்திய ஊதியக்
குழுவின் பரிந்துரைகளில் உள்ள அனைத்துக் கூறுகளையும் ஆய்வு
செய்து, அதனடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும் பொருட்டு உயர்
அலுவலர்கள் குழுவினை தற்போது இந்த அரசு அமைத்துள்ளது. இந்த
அறிக்கையின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் இந்த
அரசால் நிர்ணயிக்கப்படும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை .
செயல்படுத்துவதற்காக, 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில் 290 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
134. விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம்
ஓய்வூதியதாரர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தி வந்த
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாநில அரசு நீட்டித்துள்ளது.
இத்திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கென, 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 123 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப்
77
பலன்களுக்காக, 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் 22,394 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அகதிகள் நலன்
135. அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு
வழங்கப்படும் உதவித் தொகையுடன், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,
திருமண உதவித் திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்
போன்ற பல்வேறு நலத்திட்டப் பயன்களையும் அவர்களுக்கு நீட்டித்து
இந்த அரசு வழங்கி வருகிறது. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு
இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை
இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். 2017-2018 ஆம் ஆண்டிற்கான
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இலங்கைத் தமிழ் அகதிகள்
நலனுக்காக 116 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நலன்
136. மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு வாழ உகந்த
சூழலை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்த அரசு
உறுதிபூண்டுள்ளது. இதுவரை 11.79 இலட்சம் நபர்களுக்கு இவ்வரசு
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு சதவீத நலப்பயன்கள் சென்றடையும்
வகையில் அவர்கள் தொடர்பான விரிவான கணக்கெடுப்பினை அரசு
மேற்கொள்ளும். மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில்
435 சிறப்புப் பள்ளிகளையும், 42 தொழிற் பயிற்சி நிலையங்களையும் இந்த
அரசு நடத்தி வருகிறது. கடுமையாக கை, கால் பாதிக்கப்பட்டவர்கள்,
தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனவளர்ச்சி
குன்றியவர்களுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக
1,500 ரூபாய் அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. தொழுநோயிலிருந்து
78
மீண்ட பிறகும் கடும் நிரந்தர பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கும் இந்த
உயர்த்தப்பட்ட மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையான 1,500 ரூபாயை
இந்த அரசு வழங்கும்.
137. மாற்றுத் திறனாளிகளின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவது
நமது கடமையாகும். அதற்காக, பின்வரும் அறிவிப்புகள்
வெளியிடப்படுகிறது:
மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும்
இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களின்
எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு 1,000 லிருந்து 2,000 மாக
உயர்த்தப்படும். இதற்கென 11.97 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
பார்வைத்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால்
ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய்
மாதாந்திரப் பயணப்படியானது செவித்திறன் குறைபாடுடைய
அரசுப் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
2017-2018 ஆம் ஆண்டில் 3.16 கோடி ரூபாய் செலவில்,
பார்வைத்திறன் குறைபாடு உள்ள 10,000 நபர்களுக்கு உயர்
தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் (ளுஅயசவ ஊயநே) வழங்கப்படும்.
தசைச்சிதைவு மற்றும் பக்கவாதத்தால் கை, கால் பாதிக்கப்பட்ட
1,000 நபர்களுக்கு 6.50 கோடி ரூபாய் செலவில் மோட்டார்
பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் முதன் முறையாக
வழங்கப்படும்.
2017-2018 ஆம் ஆண்டில், அனைத்து மாவட்டங்களையும்
சேர்ந்த 10,000 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில்,
79
5 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (ளுமடைட
னுநஎநடடியீஅநவே கூசயiniபே) வழங்கப்படும்.
சென்னை மற்றும் சிவகங்கையில் 3.31 கோடி ரூபாய் செலவில்,
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டைக்
கண்டறியும் ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்படும்.
138. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 2016-2017 ஆம்
ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து 17.68 சதவீதம் உயர்த்தி
2017-2018 ஆம் ஆண்டில் 466 கோடி ரூபாயாக ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலன்
139. சிறுபான்மையினரின் நல வாழ்விற்கு ஆதரவை
அளிப்பதுடன், அவர்களைக் காத்து, பாதுகாப்பான உணர்வை
ஏற்படுத்தவும் இந்த அரசு உறுதி கொண்டுள்ளது. கிறிஸ்தவர்கள்
ஜெருசலத்திற்கும், இஸ்லாமியர்கள் ஹஜ்க்கும் புனிதப் பயணம்
செல்வதற்காக இந்த அரசு உதவி புரிந்து வருகிறது. 2016-2017 ஆம்
ஆண்டு முதல், உலமாக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர
உதவித்தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி
வழங்கப்பட்டு வருகிறது. தேவாலயங்களைப் புனரமைப்பதற்காக
2016-2017 ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் இந்த அரசால்
ஒதுக்கப்பட்டது.
80
பகுதி - ஆ
வரவு-செலவுத் திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்
140. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில்
கணிக்கப்பட்டுள்ள செலவினங்களை மேற்கொள்வதற்குத் தேவையான
நிதி ஆதாரங்களைப் பற்றி இனி விளக்க விழைகிறேன்.
141. மாநிலத்தின் வருவாய் வரவுகளில் மிக முக்கிய ஆதாரமாக
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உள்ளது. தேசிய மற்றும் உலகப்
பொருளாதாரத்தில், குறிப்பாக உற்பத்தித் துறையில், நிலவும் தொடர் மந்த
நிலை, மாநிலத்தின் சொந்த வரி வருவாயை குறிப்பிடத்தக்க அளவில்
பாதித்துள்ளது. பொருளாதாரத்தின் மீதான இத்தகைய எதிர்மறை
பாதிப்புகள், மாநிலத்தின் வரி வருவாய் ஆதாரங்களுக்கும் பாதிப்பை
ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
142. மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் வணிக வரி மிக
முக்கியமானதாகும். மத்திய அரசு, 2017-2018 ஆம் ஆண்டில் பொருட்கள்
மற்றும் சேவைகள் வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தும்போது,
மறைமுக வரி விதிப்பு முறையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை மாநிலம்
சந்திக்க உள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு
நடைமுறைப்படுத்தப்படும்போது, தமிழ்நாடு போன்ற உற்பத்தி சார்ந்த
மாநிலங்களின் வருவாய் ஆதாரங்கள் கணிசமாகப் பாதிக்கப்படும் என
எதிர்பார்க்கப்பட்டாலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஏற்படும் இழப்பை
ஈடுசெய்ய மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மதிப்புக் கூட்டு வரி
முறைக்குப் பதிலாக பொருட்கள் மற்றும் சேவைகள் வரி முறை
செயல்முறைக்கு வர உள்ளதால், வரிச்சலுகைகள் எதுவும் இந்த
வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படவில்லை. மேற்குறிப்பிடப்பட்ட
சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, வணிக வரிகளில் இருந்து
81
பெறப்படும் வருவாய், 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த
மதிப்பீடுகளில் 66,522 கோடி ரூபாய் எனவும், 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 77,234 கோடி ரூபாய்
எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
143. 2016 ஆம் ஆண்டில், ஏற்கெனவே மூடப்பட்ட
500 டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன், 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி
மாதத்தில், மேலும் 500 மதுபானக் கடைகளை அரசு மூடியுள்ளது.
இதனால், மாநிலத்தின் வருவாய் ஆதாரங்களில் ஏற்படும் இழப்பைக்
கருத்தில் கொண்டு, 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் மாநில ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருவாய்
6,903 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் முத்திரைத்
தாள்கள் மற்றும் பதிவுக் கட்டணங்களின் கீழ் வருவாய் வளர்ச்சி
எதிர்மறையாக உள்ளதால், 2017-2018 ஆம் ஆண்டில் 8,220 கோடி ரூபாய்
மட்டுமே இதன் மூலம் வருவாயாகக் கிடைக்கும் என
மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில் மோட்டார் வாகன
வரியின் மூலம் கிடைக்கும் வருவாய் 5,418 கோடி ரூபாயாக
மதிப்பிடப்பட்டுள்ளது.
144. மேற்கண்ட கணிப்புகளின் அடிப்படையில் 2016-2017 ஆம்
ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய்
87,287 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த
வரி வருவாய் 99,590 கோடி ரூபாயாக இருக்கும் எனவும்
மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய்
2017-2018 ஆம் ஆண்டில் 12,318 கோடி ரூபாயாக இருக்கும் என
கணிக்கப்பட்டுள்ளது.
82
145. பதினான்காவது நிதிக்குழுவின் பரிந்துரைகளால்
தமிழகத்தின் நிதி ஆதாரங்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி
வருகிறது. இந்நிலையில், 2015-2016 ஆம் ஆண்டு முதல், மத்திய அரசின்
நிதி உதவியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான தனது பங்கினை
மத்திய அரசு குறைத்துள்ளதால், அத்திட்டங்களில் மாநில அரசின் பங்கு
கூடியுள்ளது. இதனால், மாநிலத்தின் நிதிச்சுமை கூடியுள்ளது.
மாநிலத்திற்கு, மத்திய வரிகளில் பங்காக 2015-2016 ஆம் ஆண்டில்
மொத்தமாகப் பெறப்பட்ட 20,354 கோடி ரூபாய் என்பது 2014-2015 ஆம்
ஆண்டில் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தொகையைவிட
20.98 சதவீதம் மட்டுமே அதிகமாகும். 2015-2016 ஆம் ஆண்டில் மத்திய
வரி வருவாயில் காணப்பட்ட சாதாரணமான வளர்ச்சியான 18 சதவீத
வளர்ச்சியை இதில் குறைத்துக் கொண்டால், நிகரமாக 2.98 சதவீதம்
அளவு மட்டுமே கூடுதல் நிதியாக தமிழ்நாடு பெற்றுள்ளது. இவற்றைக்
கருத்தில் கொண்டு, மத்திய வரிகளில் மாநில அரசின் பங்காக
கிடைக்கப்பெறும் தொகை, 2016-2017 ஆம் ஆண்டிற்கான
திருத்த மதிப்பீடுகளில் 24,538 கோடி ரூபாயாகவும், 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்
27,224 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர,
மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள், 2016-2017 ஆம்
ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 20,709 கோடி ரூபாயாகவும்,

20,231 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதிநிலைக் குறியீடுகள்
146. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள்
1,59,363 கோடி ரூபாய் எனவும், மொத்த வருவாய்ச் செலவினங்கள்
83
1,75,293 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக
வருவாய்ப் பற்றாக்குறை 15,930 கோடி ரூபாயாக இருக்கும்.
உதய் திட்டத்தின் கீழ் வட்டித் தொகை செலுத்துதல், வீட்டு
நுகர்வோருக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் வழங்கும்
திட்டம் மற்றும் கூட்டுறவுக் கடன் தள்ளுபடித் திட்டம் போன்ற
திட்டங்களால் அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சுமைகளால் வருவாய்ச்
செலவினம் அதிகரித்துள்ளபோதிலும், 2017-2018 ஆம் ஆண்டிற்கான
வருவாய்ப் பற்றாக்குறை அதற்கு முந்தைய ஆண்டின் அளவிலேயே
கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
147. 2016-2017 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்
பகிர்மானக் கழகத்தின் 22,815 கோடி ரூபாய் அளவிலான கடன்
பொறுப்புகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால், தமிழ்நாடு நிதிநிலை
நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்ட விதிமுறை அளவான மாநில மொத்த
உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதம் என்ற அளவைக் காட்டிலும்,
நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். எனினும், தமிழ்நாடு மின்உற்பத்தி
மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன் சுமையை ஏற்றுக்கொள்ளும்
அளவிற்கு மூன்று சதவீதத்திற்கும் மேல் இந்த நிதிப் பற்றாக்குறை
அளவை மத்திய அரசு அனுமதித்து, அந்த அளவிற்குக் கடன் பெற சிறப்பு
அனுமதி அளித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, 2003 ஆம்
ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத்தில்
தேவைப்படும் திருத்தங்கள் செய்வது தொடர்பான சட்டமுன்வடிவு,
சட்டமன்றப் பேரவையின் இந்தக் கூட்டத் தொடரில்
அறிமுகப்படுத்தப்படும்.
148. 2016-2017 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை
61,341 கோடி ரூபாயாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்
4.58 சதவீதமாகும். அரசு ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு மின்உற்பத்தி
84
மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன் நீங்கலாக, 2016-2017 ஆம்
ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 38,526 கோடி ரூபாயாகவும், மாநில மொத்த
உற்பத்தி மதிப்பில் அதன் அளவு 2.88 சதவீதமாகவும் மட்டுமே இருக்கும்.

மூலதனச் செலவுகள் 27,789 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 41,977 கோடி ரூபாயாகக்
கணக்கிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்
2.79 சதவீதமாகும். இது நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு உட்பட்டே
இருக்கும். அனுமதிக்கப்பட்ட நிகரக் கடன்கள் 45,119 கோடி ரூபாயாக
இருப்பினும், 2017-2018 ஆம் ஆண்டு 41,965 கோடி ரூபாய் வரை மட்டுமே
நிகரக் கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி
மற்றும் பகிர்மானக் கழகத்திடமிருந்து பொறுப்பேற்றுக்கொண்ட
கடனையும் சேர்த்து, 2018 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில்
நிகர நிலுவைக் கடன்கள் 3,14,366 கோடி ரூபாயாக இருக்கும்.
மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் இந்த நிலுவைக் கடன் அளவு
20.90 சதவீதமாக இருக்கும் என்பதால், அனுமதிக்கப்பட்ட 25 சதவீத
அளவிற்கு உட்பட்டே கடன் அளவு இருக்கும் என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
149. இந்த நிதிநிலை அறிக்கையின் இணைப்பாக இடைப்பட்ட
கால நிதி நிலவரத் திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதனை நிதிநிலை
அறிக்கையின் ஒரு பகுதியாகக் கருதி அவையில் படிக்கப்பட்டதாக
எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
150. இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள், நிதி ஆதாரங்கள்
குறைந்துவரும் நெருக்கடியான சூழ்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
உறுதியற்ற நிலையில் உள்நாட்டுப் பொருளாதாரம் தொடர்ந்து இருந்து
85
வரும் நிலையில், மாநிலப் பொருளாதார நிலையை மீட்டெடுக்கும்
பொருட்டு கடினமான முயற்சிகளை இந்த அரசு செய்து வருகிறது.
மாநிலத்தின் கடன் அளவு, உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்
அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் தொடர்ந்து இருந்த போதிலும் வருவாய்ப்
பற்றாக்குறை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவே உள்ளது.
எனினும், 2017-2018 ஆம் ஆண்டிற்கான வருவாய்ப் பற்றாக்குறையின்
அளவை 2016-2017 ஆம் ஆண்டு இருந்த அளவிலேயே இந்த அரசு
கட்டுப்படுத்தும். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்
கடனுக்கு அரசு பொறுப்பேற்றுக் கொண்டதால், 2016-2017 ஆம் ஆண்டில்
வரையறைக்கும் அதிகமாக நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலை
தற்காலிகமானதாகும். எனவே, 2017-2018 ஆம் ஆண்டில் நிதிப்
பற்றாக்குறை அனுமதிக்கப்பட்ட வரையறைக்குள் கட்டுப்படுத்தப்படும்.
மாநிலத்தின் நிதி மேலாண்மையை வலுவான பாதையில் மீட்டுக்
கொண்டுவர இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து
மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு தொடர்ந்து
எடுத்து வரும் நடவடிக்கைகள் மூலம் பொருளாதார வளர்ச்சியினை
மீட்டெடுத்து, மாநிலத்திற்கு அதிக நிதி ஆதாரங்கள் கிடைக்க வழி
ஏற்படும் என்றும், அதனால் வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தைத்
தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வழிவகை ஏற்படும் என்றும் உறுதியாக
நம்புகிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
(குறள் 622)
151. வெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பங்களையும்
அறிவுடையவன் தன் உள்ளத்தின் உறுதியால் வென்றுவிடுவான் என்பது
86
திருவள்ளுவரின் பொய்யாமொழி. ஏழைகளின் ஏந்தலாகவும், தெய்வத்
திருவிளக்காகவும் நம்மை வழிகாட்டி, வழிநடத்தி, பாதுகாத்து வந்த
போற்றுதலுக்குரிய புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று
நம்மிடையே இல்லை. அவரின் இழப்பு நமக்கும், நம் மாநிலத்திற்கும்
ஈடுசெய்ய முடியாத ஒன்று. அறியாமை என்ற இருளைப் போக்கி,
வறுமையை இந்த மண்ணிலிருந்து அகற்றி, ஏழை எளிய மக்களின்
வாழ்வில் ஒளியேற்ற, அரசு என்ற அகல்விளக்கை அவர் நம்மிடம்
ஒப்படைத்துச் சென்றுள்ளார்கள். சிலரின் தவறான வழிகாட்டுதலால்
வழி தவறிய நமது சகோதரர்கள் சிலரின் செயல்களால் ஏற்பட்ட அரசியல்
குழப்பங்களுக்கிடையிலும் நாம் அந்த அகல்விளக்கை அணையாமல்
பாதுகாத்துள்ளோம். அந்த அகல்விளக்கை அணையா விளக்காகக்
கொண்டு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிப்பது
நமது கடமையாகும். அனுபவ அறிவு மிகுந்த நமது மாண்புமிகு
முதலமைச்சர் அவர்களின் தலைமையில், நமது போற்றுதலுக்குரிய
புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் தீட்டிய அனைத்துத்
திட்டங்களையும் செம்மையாக, தொய்வின்றி செயல்படுத்துவதோடு, நாம்
தொடர்ந்து முன்னேற, பல புதிய மக்கள் நலத் திட்டங்களையும் தீட்டி
செயல்படுத்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
152. இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரிப்பதில் எனக்கு
வழிகாட்டிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், என்னுடன்
பணியாற்றும் அமைச்சரவை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த
நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது உயிருக்கு உயிராய்
இருந்து எங்களை வழிநடத்தும் போற்றுதலுக்குரிய புரட்சித் தலைவி
ஜெ ஜெயலலிதா அவர்கள் அமைத்துத் தந்த எல்லைகளுக்கு உட்பட்டு
இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. என்னுள்
உள்ளொளியாய் விளங்கி என்றும் எனக்கு வழிகாட்டி வரும் அவருக்கு
87
நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
153. இந்த நிதிநிலை அறிக்கையை வடிவமைத்து தயாரிப்பதில்
என்னுடன் அயராது பணியாற்றிய நிதித்துறை கூடுதல் தலைமைச்
செயலாளர் திரு. க.சண்முகம், இ.ஆ.ப., அவர்களுக்கும், அவருடன்
கடினமாக உழைத்துப் பணியாற்றிய நிதித்துறையின் அனைத்து
அலுவலர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
154. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு இந்த
அவையின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
வணக்கம்
டி.ஜெயக்குமார்
மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும்
நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர்
சென்னை
2017 ஆம் ஆண்டு
மார்ச் திங்கள் 16 ஆம் நாள்
திருவள்ளுவர் ஆண்டு 2048
துன்முகி - பங்குனித் திங்கள் 3 ஆம் நாள்
88
இணைப்பு
இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம்
2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப்
பொறுப்புடைமைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் உட்பிரிவு (1)-ன்படி,
வரவு-செலவுத் திட்ட அறிக்கையுடன், இடைப்பட்ட கால நிதி நிலவரத்
திட்டம் குறித்த அறிக்கை ஒன்றையும், மாநில அரசு சட்டப் பேரவையில்
வைக்க வேண்டும். மேலும், இச்சட்டத்தின், 3 ஆம் பிரிவின் உட்பிரிவு
(2)-ன்படி, வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை போன்ற நிதி
நிலைக் குறியீடுகளுக்கான இலக்குகளை அடுத்தடுத்து வரும்
ஆண்டுகளுக்குக் குறிப்பிட்டும், அவற்றின் கணக்கீட்டிற்கான
அனுமானங்களைத் தெளிவாக விளக்கியும் இடைப்பட்ட கால நிதி
நிலவரத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். மேற்சொன்ன சட்டத்தின் கீழ்
கூறப்பட்டுள்ள விதிகளின்படி, நடப்பு நிதியாண்டு மற்றும் 2018-2019 ஆம்
ஆண்டிலிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான இடைப்பட்ட கால
நிதி நிலவரத் திட்டம் சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்படுகிறது.
நோக்கங்கள்
வளர்ச்சி திட்டச் செலவினங்களுக்கான தேவைகள் மற்றும் நிதி
சிக்கனத்திற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் வகையிலும்,
முக்கியத் துறைகளில் முதலீட்டுக்குத் தேவையான அடிப்படை நிதி
ஆதாரத்தை உருவாக்ககக் கூடிய, உயர் பொருளாதார வளர்ச்சியை
அடையும் வகையிலும் இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம்
வகுக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற
பல்வேறு பணிகளுக்கான நலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி
வருகிறது. அதே வேளையில், அகவிலைப்படியின் காலமுறை உயர்வு,
ஊதிய உயர்வு, புதிய பணியிடங்கள் தோற்றுவிப்பு மற்றும் காலியாக
89
உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றின் காரணமாக
தொடர்ந்து உயர்ந்துவரும் நிருவாகச் செலவினங்களுக்கான நிதித்
தேவைகளையும் மாநில அரசு நிறைவு செய்ய வேண்டியுள்ளது. மக்கள்
நலத் திட்டங்கள் மற்றும் நிருவாகச் செலவினங்களுக்கு இந்த அரசு
அதிக அளவில் செலவிட்டு வருவதுடன், சாலைகள் மற்றும் பாலங்கள்
கட்டுதல், நீர்ப்பாசனம் மற்றும் மின் திட்டங்கள் போன்ற மூலதனச்
செலவுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. பல்வேறு
தடைகள் இருந்தாலும், மத்திய நிதிக்குழு வகுத்துள்ள
இலக்குகளுக்குட்பட்டு நிதிநிலை உறுதித்தன்மையை அடையவும்
மாநில அரசு உறுதியாக உள்ளது.
2017-2020 ஆம் ஆண்டு காலக்கட்டத்திலும், அதனைத்
தொடர்ந்து வரும் காலத்திலும், வருவாய்ப் பற்றாக்குறை அளவைக்
கட்டுப்படுத்துதல், 2018-2019 ஆம் ஆண்டினைத் தவிர்த்து ஏனைய
ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்
மூன்று சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துதல் மற்றும் மத்திய நிதிக்குழு
நிர்ணயித்துள்ள வரம்பிற்குள் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவைக்
கடன் அளவு சதவீதத்தைப் பராமரித்தல் ஆகிய நிதிநிலை இலக்குகள்
பராமரிக்கப்படுவதை இந்த இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டமானது
உறுதி செய்கிறது.
எதிர்காலக் கணிப்புகள்
மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு, புதிய 2011-2012 ஆம்
ஆண்டின் நிலையான விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போதைய போக்குகளின் அடிப்படையில், வரும் ஆண்டுகளில்
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி உயர் விகிதத்தில் இருக்குமென
கணிக்கப்பட்டுள்ளது.
90
ஐ. வருவாய்க் கணக்கு வரவுகள்
மத்திய அரசின் நிதி உதவி உள்ளிட்ட மாநில அரசின் மொத்த
வருவாய் வரவுகள் 2017-2018 ஆம் ஆண்டில் 1,59,363 கோடி ரூபாயாக
இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் முக்கியக் கூறுகள் மற்றும்
அவற்றின் வளர்ச்சிப் போக்குகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
1. மாநில அரசின் சொந்த வரிவருவாய்
2011-2012 ஆம் ஆண்டின் நிலையான விலையில், 2012-2013 ஆம்
ஆண்டில் 4.85 சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின்
வளர்ச்சியானது, 2015-2016 ஆம் ஆண்டில் 8.79 சதவீதமாக
உயர்ந்துள்ளது, இவ்வளர்ச்சி, மாநிலப் பொருளாதார வளர்ச்சி மீண்டு
வருகிறது என்பதற்கான அறிகுறியாகும். 2011-2012 ஆம் ஆண்டின்
நிலையான விலையில், 2016-2017 ஆம் ஆண்டில் மாநில மொத்த
உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி 7.94 சதவீதமாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. அரசு எடுத்து வரும் ஒருங்கிணைந்த
முயற்சிகளால் பொருளாதாரம் மேலும் ஊக்கம் பெறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம்
உயர் வளர்ச்சி வீதத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், உலக அளவிலும், உள்நாட்டிலும் தொடர்ந்து நிலவி
வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் குறிப்பிட்ட மதிப்புள்ள ரூபாய்
நோட்டுகளின் மதிப்பிழப்பு ஆகியவை மாநிலத்தின் பொருளாதாரத்தில்
குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பொருளாதாரத்தில் மீதான
எதிர்மறை தாக்கம், மாநிலத்தின் சொந்த வரி வருவாயிலும் இழப்பை
ஏற்படுத்தியுள்ளது.
91
2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளின்படி
மாநில அரசின் சொந்த வரி வருவாய் 87,287 கோடி ரூபாயாகும்.

இது 99,590 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2018-2019 மற்றும் 2019-2020 ஆம் ஆண்டுகளில், முறையே 15.20 மற்றும்
13.78 சதவீதம் வளர்ச்சி பெறும் என கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.
மாநில அரசின் சொந்த வரி வருவாயின் முக்கிய அம்சங்கள் கீழே
குறிப்பிடப்பட்டுள்ளன:-
2017-2018 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள
சரக்கு மற்றும் சேவை வரி முறையினால், மாநிலத்தின் நிதி
ஆதாரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்
என எதிர்பார்க்கப்படுவதை கருத்தில் கொண்டு, 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வணிக
வரியின் மூலம் பெறப்படும் வரவுகள் 77,234 கோடி ரூபாயாக
இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், டாஸ்மாக் மூலம் நடத்தப்படும்
மதுபானக் கடைகளில் மேலும் 500 கடைகளை சமீபத்திலும்,
மொத்தத்தில் 1,000 கடைகளை, மூடப்பட்டுள்ளதன் தாக்கத்தின்
அடிப்படையிலும், தற்போதைய போக்குகளின் அடிப்படையிலும்,
2017-2018 ஆம் ஆண்டில் மாநில ஆயத்தீர்வைகளின் மூலம்
வரவுகள் 6,903 கோடி ரூபாயாக இருக்குமென
மதிப்பிடப்பட்டுள்ளது.
மந்தமான பொருளாதார வளர்ச்சி, பண மதிப்பிழப்பு மற்றும்
அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகளில் உள்ள சொத்துக்களின்
விற்பனையை பதிவு செய்வதற்கான தடை ஆகியவற்றால்
92
முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலம்
கிடைக்கும் வரவுகளை பாதித்துள்ளது. இவற்றை கருத்தில்
கொண்டு, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில்,
7,985 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட முத்திரைத்தாள் தீர்வை
மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலமாகக் கிடைக்கும் வரவுகள்,
2017-2018 ஆம் ஆண்டில் 8,220 கோடி ரூபாயாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில்
4,733 கோடி ரூபாயாக மோட்டார் வாகன வரிவருவாய் இருக்கும்
என்ற மதிப்பீடானது, 2017-2018 ஆம் ஆண்டிற்கான
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5,418 கோடி ரூபாய் என
மதிப்பிடப்பட்டுள்ளது.
2. வரி அல்லாத வருவாய்
2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய்
12,318 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் சுரங்கத்
தொழிலுக்கான வாய்ப்புகள் குறைவு என்பதாலும், பெரும்பாலான அரசு
சேவைகள் கட்டணம் இல்லாமலோ அல்லது குறைந்த கட்டணத்திலோ
வழங்கப்படுவதாலும், 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டு
அளவிலிருந்து சிறிதளவே உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2018-2019
மற்றும் 2019-2020 ஆம் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம்
8 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
93
3. மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு
மாநிலங்களுக்கிடையே மத்திய வரிகளில் நிகர வரி வருவாயில்
தமிழகத்தின் பங்கினை, ஒவ்வொரு நிதிக்குழுவும் குறைத்து வருகிறது.
மத்திய வரிகளின் நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டிற்கான பங்கானது,
பதிமூன்றாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளைக் காட்டிலும்,
பதினான்காவது நிதி ஆணையத்தின் பரிந்துரையால், சேவை வரியில்
5.047 சதவீதத்திலிருந்து 4.104 சதவீதமாகவும், ஏனைய வரிகளைப்
பொறுத்தவரையில் 4.969 சதவீதத்திலிருந்து 4.023 சதவீதமாகவும்
சரிவைக் கண்டுள்ளது. எனினும், உயர்த்தப்பட்ட மத்திய அரசு வரிகள்
மற்றும் தீர்வைகளால், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்கள்
பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017-2018 ஆம்
ஆண்டிற்கான மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் உள்ள
கணிப்புகளின் அடிப்படையில், 2017-2018 ஆம் ஆண்டில் மத்திய
வரிகளில் நமது மாநிலத்திற்கான பங்கு 27,224 கோடி ரூபாயாக
இருக்குமென இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்
மதிப்பிடப்பட்டுள்ளது. 2018-2019 மற்றும் 2019-2020 ஆம் ஆண்டுகளில்
வளர்ச்சி விகிதம் 14 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
4. மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள்
மத்திய அரசின் நிதி உதவியில் செயல்படுத்தப்படும்
திட்டங்களுக்கான நிதியுதவி மற்றும் பதினான்காவது நிதி
ஆணையத்தின் பரிந்துரைகளின்படி வழங்கப்படும் உதவி
மானியங்களுக்கு, 2017-2018 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின்
வரவு-செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை
கருத்தில் கொண்டு, 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில் மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள்
94
20,231 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2018-2019

10 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஐஐ. வருவாய்க் கணக்கில் செலவுகள்
2017-2018 ஆம் ஆண்டில் வருவாய்க் கணக்கு செலவுகள்
1,75,293 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2016-2017 ஆம்
ஆண்டு திருத்த மதிப்பீடுகளை விட 10.06 சதவீதம் கூடுதலாகும்.
வருவாய்க் கணக்கு செலவுகளின் முக்கிய கூறுகள் கீழே
விவரிக்கப்பட்டுள்ளன.

சம்பள செலவினத்திற்கான ஒதுக்கீடு 46,332 கோடி ரூபாயாகும்.
ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வுக்கால பலன்கள் குறித்த
செலவினத்திற்கான ஒதுக்கீடு 20,577 கோடி ரூபாயாகும். ஏழாவது
ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதால்
ஏற்படக்கூடிய செலவினம் இம்மதிப்பீடுகளில் சேர்க்கப்படவில்லை.
இந்த நிதி ஒதுக்கீடுகள், மொத்த வருவாய்ச் செலவுகளில்
38.17 சதவீதமாகும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி
ஊதிய விகிதங்களின் திருத்தம், அகவிலைப்படியின் காலமுறை
உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புதல்
ஆகியவற்றால் ஏற்படக்கூடிய செலவுகளின் காரணமாக,
2018-2019 ஆம் ஆண்டிற்கான சம்பளச் செலவினம்,
மற்றும் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வுகாலப் பலன்கள்
குறித்த செலவினங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி விகிதம்,
முறையே 31.58 மற்றும் 34.37 சதவீதமாக இருக்கும் எனவும், இதுவே
95
2019-2020 ஆம் ஆண்டில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய
இரண்டிற்கும் 10 சதவீதமாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.

மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு
72,616 கோடி ரூபாயாகும். உணவு மானியம், மின்சார மானியம், கல்வி
உதவித் தொகைகள், வீட்டுவசதித் திட்டங்கள் போன்ற தற்போது
நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான
செலவினம், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் வீடுகளுக்கு 100
யூனிட் இலவச மின்சாரம் போன்ற புதிய திட்டங்களுக்கான கூடுதல்
செலவினங்கள் இந்த மதிப்பீடுகளில் உள்ளடங்கியுள்ளன. மேலும்,
ஐந்தாவது மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்துவதற்கு, மாநிலத்தின் சொந்த வரிவருவாயின்
வளர்ச்சிக் கணிப்பிற்கேற்ப, உள்ளாட்சி அமைப்புகளுக்கான
அதிகரிக்கப்பட்ட நிதிப்பகிர்வும் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்
சேர்க்கப்பட்டுள்ளது. 2018-2019 மற்றும் 2019-2020 ஆம்
ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம், முறையே 6.5 மற்றும்
7.05 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் அல்லாத செயல்முறை மற்றும் பராமரிப்பு செலவுகள்
9,764 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில், குறிப்பாக, பராமரிப்பு, நிர்வாகச் செலவுகள்,
எரிபொருள் செலவுகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை
வழங்குதல் ஆகிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை
உள்ளடக்கியதாகும். 2018-2019 மற்றும் 2019-2020 ஆம்
ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் 5.22 சதவீதமாக இருக்கும்
எனக் கருதப்படுகிறது.
96

வட்டி செலுத்துவதற்கான செலவினம் 25,982 கோடி ரூபாய் என
மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த வருவாய்ச் செலவுகளில்
14.82 சதவீதமாகும். மேலும், 2016-2017 ஆம் ஆண்டு திருத்த
மதிப்பீடுகளில் 21,397 கோடி ரூபாய் என இச்செலவினம்
மதிப்பிடப்பட்டுள்ளது. ‘உதய்’ திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு
ஏற்பட்டுள்ள கூடுதல் வட்டிச் செலவினத்தால், 2016-2017 ஆம்
ஆண்டு திருத்த மதிப்பீடுகளைவிட, 2017-2018 ஆம் அண்டிற்கான
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் உயர்ந்துள்ளது. 2017-2018 ஆம்
ஆண்டிற்கான வட்டிச் செலவு மொத்த வருவாய் வரவில்
16.30 சதவீதமாகும். இது, 2018-2019 மற்றும் 2019-2020 ஆம்
ஆண்டுகளில், முறையே, 16.77 மற்றும் 17.38 சதவீதமாக இருக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஐஐ. மூலதனக் கணக்கில் செலவுகள்
மூலதனப் பணிகளுக்கான செலவை மேற்கொள்வதில் இந்த அரசு
தனிக் கவனம் செலுத்தி வருகிறது. 2016-2017 ஆம் ஆண்டிற்கான
திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மூலதனப் பணிகளுக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்ட 22,369 கோடி ரூபாய், திருத்த மதிப்பீடுகளில்
24,193 கோடி ரூபாயாக உயர்த்தி கணிக்கப்பட்டுள்ளதுடன்,

27,789 கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது
2018-2019 ஆம் ஆண்டில் 8.06 சதவீதம் மற்றும் 2019-2020 ஆம்
ஆண்டில் 10.07 சதவீதமாகவும் மேலும் உயரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
97
ஐஏ. வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை
உள்நாட்டில் நிலவும் மந்தமான பொருளாதார சூழ்நிலையின்
காரணமாக, வரி வருவாய் வளர்ச்சியானது 2016-2017 ஆம்
ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்டத்தில் மதிப்பீடுச்
செய்யப்பட்டதை விட குறைந்துள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய்
வளர்ச்சி விகிதத்தில், குறிப்பாக முத்திரைத்தாள்கள் மற்றும் பதிவுக்
கட்டணங்களின் கீழ் பெறப்படும் வரவுகளில், குறிப்பிடத்தக்க சரிவு
காணப்படுகிறது. எனவே, 2017-2018 ஆம் ஆண்டில் வருவாய்ப்
பற்றாக்குறை 15,930 கோடி ரூபாயாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. 2016-2017 ஆம் ஆண்டிற்கான நிதிப்
பற்றாக்குறை 40,534 கோடி ரூபாயாக இருக்கும் என திருத்த
வரவு-செலவுத் திட்டத்தின்படியான மதிப்பீடு, திருத்த மதிப்பீடுகளில்
61,341 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது. இது, மாநில மொத்த
உற்பத்தி மதிப்பில் 4.58 சதவீதம் என்பதுடன், தமிழ்நாடு நிதி நிலை
நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் வரையறைக்கும் கூடுதலாகும்.
தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின்
வரையறைக்கும் கூடுதலான நிதிப் பற்றாக்குறை, ‘உதய்’ திட்டத்தின் கீழ்
மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மானக் கழகத்தின் கடன்களால் ஏற்பட்டுள்ளது. இது, ஒரு தற்காலிக
நிலை மட்டுமே ஆகும். எனவே, 2017-2018 ஆம் ஆண்டில் மாநில மொத்த
உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் மீண்டும் 3 சதவீதத்திற்கு
குறைவாக வரப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலர் குழுவின்
அறிக்கையின் அடிப்படையில், ஏழாவது ஊதியக் குழுவின்
பரிந்துரைகளை செயல்படுத்தும்போது, ஒன்று அல்லது இரண்டு
ஆண்டுகளுக்கு மாநிலத்தின் நிதி நிலைமையின் சுமையை அதிகரிக்கும்.
2017-2018 ஆம் ஆண்டில் 41,977 கோடி ரூபாயாக இருக்கும்
98
என மதிப்பிடப்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை, மாநில மொத்த உற்பத்தி
மதிப்பில் 2.79 சதவீதமாகும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்
பற்றாக்குறை விகிதம் 2018-2019 ஆம் ஆண்டில் 3.18 சதவீதமாகவும்,
2019-2020 ஆம் ஆண்டில் 2.82 சதவீதமாகவும் இருக்கும்.
ஏ. கடன்கள்
பதினான்காவது நிதி ஆணையம் பரிந்துரைத்த கணக்கீட்டின்படி
மத்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில்,
கடன் வரவுகள் மற்றும் திரும்பச் செலுத்துதல் மதிப்பிடப்பட்டுள்ளன.
2017-2018 ஆம் ஆண்டிற்கான, நிகரக் கடன் வரம்பு 45,119 கோடி ரூபாய்
என்று கணிக்கப்பட்டிருந்தாலும், மாநில அரசு 41,965 கோடி ரூபாய்
மட்டுமே நிகரக் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி
உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன் 31.03.2018 அன்று, 3,14,366 கோடி
ரூபாயாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்
20.90 சதவீதம் மட்டுமே ஆகும்.
ஏஐ. கடன் உத்திரவாதங்கள்
ஒவ்வொரு ஆண்டிலும் நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்
முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 100 சதவீத
அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 10 சதவீத அளவு,
இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற
வேண்டும். 31.3.2016 அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு
உத்தரவாதங்களின் அளவு முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்
வரவுகளில் 42.14 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி
மதிப்பீட்டில் 4.25 சதவீதமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும்
மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் (சுளைம றநiபாவநன)
கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய
ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 75 சதவீதம் அல்லது
99
மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 7.50 சதவீதம் இவற்றில்
எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும்.
31.3.2016 அன்று உள்ளபடி மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின்
அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு
உத்திரவாதங்களின் (சுளைம றநiபாவநன பரயசயவேநநள) அளவு, முந்தைய
ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 8.29 சதவீதமாகவும் மாநிலத்தின்
மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 0.84 சதவீதமாகவும் உள்ளது.
முடிவுரை
மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் மெல்ல
முன்னேறிச் செல்வதை, 2012-2013 ஆம் ஆண்டில்
4.85 சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி
விகிதமானது (நிலையான விலைகளின் அடிப்படையில்), 2016-2017 ஆம்
ஆண்டில் 7.94 சதவீதமாக அதிகரித்துள்ளது தெளிவாக்குகிறது.
இருப்பினும், மாநிலத்தின் சொந்த வரி வருவாய், குறிப்பாக,
முத்திரைத்தாள்கள் மற்றும் பதிவுக் கட்டணங்களின் கீழ் பெறப்படும்
வரவுகளில் இழப்பு, வருவாய் வரவுகளில் கடுமையான வீழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. மேலும், பதினான்காவது நிதிக் குழுவின்
பரிந்துரைகளால் மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய
நிகர வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு குறைந்தது மற்றும் மத்திய அரசு
பொறுப்பேற்கும் திட்ட பணிகளில் மாநில அரசின் பங்கு உயர்ந்தது
ஆகியவை மாநில அரசின் நிதிநிலையை பாதித்துள்ளது. எனினும்,
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி அளவை உயர்த்தியதன் மூலம்
வணிகவரி வசூல் உயரும் எனக் கருதப்படுகிறது. ஏழாவது மத்திய
ஊதியக்குழுவின் பரிந்துரைகளை, அலுவலர் குழுவின் அறிக்கையின்
அடிப்படையில் செயல்படுத்துவதால் ஊதிய விகிதத்தில் ஏற்படும்
திருத்தத்தைத் தவிர, இதர செலவுகளின் பாங்கு நிலையாக உள்ளது.
100
வருவாய் வரவுகளில் காணப்படும் இந்த சுணக்கமான சூழ்நிலையிலும்,
ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை, நிகரக் கடன், மாநிலத்தின் மொத்த
உற்பத்தி மதிப்பில் நிலுவையில் உள்ள மொத்தக் கடன் விகிதம்
ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும்.
மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு வழிவகைச் செய்யும்
விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய அரசு அனைத்து
வகையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து
நிதி மேலாண்மையை வலுப்படுத்தும்.
*****************

No comments:
Post a Comment